சென்னை தென்னிந்திய நடிகர்கள் சங்க கட்டிட வளாகத்தில் நடிகர் மற்றும் இயக்குனர் பாரதிராஜா அவர்களின் தலைமையில் சங்கரதாஸ் சுவாமிகள் அணி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது இதில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஐசரி கணேஷ் , நடிகர் பிரசாந்த் ,நடிகர் ஷியாம், நடிகர் ரமேஷ் கண்ணா, நடிகை ஆர்த்தி, வீட்டு நடிகர் அருண்பாண்டியன் ஆகியோர் ஆதரவு ஆதரவு தெரிவித்து அங்கு வந்தனர் பின்னர் அனைவரும் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்தனர் பின்னர் செய்தியாளரிடம் பேசிய நடிகரும் இயக்குனர் பாக்யராஜ் பேட்டியளித்த போது..
நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியினருக்கு எதிராக பாக்கியராஜா அணி களம் இறங்குகிறது தலைவர் பதவிக்கு பாக்கியராஜ் போட்டியிடுகிறார் துணை தலைவராக நடிகர் உதயா நடிகை குட்டி பத்மினி மற்றும் பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகின்றனர். பொருளாளர் கார்த்தியை எதிர்த்து நடிகர் பிரசாந்த் போட்டியிட உள்ளார். இதனை தொடர்ந்து செயற்குழு உறுப்பினர்கள் நடிகர் ஆரி, சாந்தனு , ஆர்த்தி கணேஷ் , நடிகர் விமல் ,நிதின் சத்யா , நடிகை சங்கீதா, காயத்ரி ரகுராம், அருன் பாண்டியன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்யதனர்
ரஜினி காந்த் வாழ்த்துகள் தெரிவித்தார். இந்த கட்டிடம் கட்ட இந்த அணி செயல் படும் , அந்த பாண்டவர் அணியின் மன கச ப்பால் தான் சிலர் இந்த அணியில் சேர்ந்துள்ளனர்
32 ஆண்டுகளாக நடிகர் சங்கதுகும் எனக்கும் தொடர்பு உண்டு . இந்த சங்கத்தை உருவாக்கி ஆசீர்வாதம் கொடுத்த சுவாமி சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை தான் இந்த அணிக்கு வைத்துள்ளோம். இது வெற்றி அணி. இளைஞர்கள் என்னிடம் உதவி கேட்டனர் , அதனால் தான் இந்த அணிக்கு தலைமை பொறுப்பு ஏற்றேன் . ஆறு மாதங்களில் கட்டிடம் முடிக்க படும்.என்று கூறினார்கள் ஆனால் மெத்தனமாக செயல் படுகிறார்கள் பாண்டவர் அணி. இந்த கட்டிடம் விரைவில் கட்டி முடிக்கவே இந்த அணி செயல் படும். ஒன்றரை வருடங்களாக இந்த கட்டிடம் வேலைகளை சரியாக நடக்க வில்லை. இன்னும் 22 கொடி தேவை படுகிறது இந்த நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க . சங்க கட்டிடம் கட்டவும் நாடக கலைஞர்கள் நல வாழ்விற்காக தான் இந்த அணியை துவங்கியுள்ளோம் . 24 மணி நேரமும் கண் முழித்து செயல் பட தயார் என்று கூறி நடிகர் பிரசாந்த் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுகிறார்
இந்த அணி செயல்பாட்டில் அரசியல் இல்லை , அரசியல் இருந்தால் நானே போட்டியிட மாட்டேன் என்று தலைவர் பாக்யராஜ் கூறினர்
ஆரம்பத்தில் இருந்து ஐசரி கணேஷ் தான் இந்த கட்டிடம் கட்ட பாண்டவர் அணிக்கு பக்க பலமாக இருந்து வந்துள்ளார் என கூறினார்.