தமிழகத்தில் 84.5 லட்சம் பயனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள மருத்துவர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வுக்கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் பங்கேற்ற பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கரோனா சிகிச்சை மையங்கள், தடுப்பூசி முகாம்கள், கரோனா பரிசோதனை மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 110 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் கொண்ட மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கிறார். அதே போல், சென்னையில் ஏற்கெனவே இயங்கிக் கொண்டிருக்கும் கார் ஆம்புலன்ஸ் சேவையையும் திருப்பூரில் தொடக்கிவைக்கிறார். இந்த ஆம்புலன்ஸ் மூலமாக நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவும்,ஆய்வகங்களுக்கு அழைத்துச் செல்லவும் பயன்படுத்தப்படும்.
திருப்பூரில் 1,000 படுக்கைகள் அளவுக்கு காலியாக உள்ளதால் பதற்றமற்ற சூழல் உருவாகியுள்ளது. திருப்பூரில் 2.12 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள 16 ஆயிரம் தடுப்பூசிகளும் ஞாயிற்றுக்கிழமை போடப்படும். தமிழகத்துக்கு வந்துள்ள 95.5 லட்சம் தடுப்பூசிகளில
