தங்கம் விலை திடீர் உயர்வு வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!

தமிழகம் வணிகம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 25,688ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சர்வதேச சந்தையில் சில தினங்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வந்தது. இந்நிலையில்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்துள்ளது..

முன்னதாக கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல்முறையாக ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 25 ஆயிரத்தை தாண்டியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தங்கம் விலை உயர வாய்ப்பு உள்ளதாக கடை நிர்வாகிகள் தெரிவித்தனர்

ஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *