மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி அரசுகளுக்கும் துயரத்தில் பங்கெடுத்த உலகத் தமிழ் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.!!

தமிழகம்

மறைந்த சின்ன கலைவாணர் நடிகர் விவேக் மனைவி அருள்செல்வி அரசுகளுக்கும் துயரத்தில் பங்கெடுத்த உலகத் தமிழ் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.!!

மறைந்த நடிகர் விவேக் குடும்பத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர், விவேக்கின் மனைவி அருள்செல்வி மகள்கள் அமிர்த நந்தினி, தேஜஸ்வினி மைத்துனர் செல்வகுமார் பத்திரிகையாளர் சந்திப்பின்போது உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விவேக்கின் மனைவி அருள்செல்வி,

எங்களுக்கு பக்க பலமாக இருந்த மத்திய மாநில அரசிற்கு நன்றி, அரசு மரியாதை அளித்ததற்கு அரசிற்கு நன்றி, இறுதி வரை உடன் இருந்த காவல்துறைக்கும், ஊடக்கத்துறைக்கும் நன்றி.

இறுதி அஞ்சலியில் பங்கு பெற்ற கோடான கோடி ரசிகர்கர்களுக்கும் எங்கள் துயரத்தில் பங்கெடுத்த உலகமெங்கும் உள்ள அவரது ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம். என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *