பீட்டாவின் சர்வாதிகார போக்குக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். முதலிடம் வகிக்கும் இந்தியாவின் பால்வளத்தை அழித்து, விவசாய பெருமக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்து, பால் உற்பத்தியாளர்களை இல்லாமல் செய்துவிட துடிக்கும் பீட்டா, இந்திய விவகாரங்களில் தலையிட ஒன்றிய அரசு நிரந்தரமாகத் தடை விதிக்க வேண்டும். அதை மாநில அரசும் வலியுறுத்தி தமிழக பால் உற்பத்தியாளர்களைக் காத்திட தனி சட்டம் இயற்ற வேண்டும்.
தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டான ஜல்லிக்கட்டை பீட்டாவிடமிருந்து மீட்டதுபோல் இந்திய பால்வள உற்பத்தி செய்யும் விவசாய பெருமக்களுக்கு பொதுமக்கள் எப்போதும் துணை நிற்க வேண்டும்” .