மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளருக்கான கிராம சபை பயிற்சி பட்டறை செப்.22, 2019. அன்று சென்னை மாவட்டம் நந்தனத்தில் உள்ள ஹுயுமா மருத்துவமனை கலை அரங்கத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு பயிற்சி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளர்கள் பங்கேற்றனர்
இந்த கூட்டத்தில் சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று, கிராம சபை கூட்டத்தின் நோக்கம், கிராம சபை கூட்டத்தில் செய்யவேண்டியது செய்யக்கூடாதவை, காந்தியம், கிராமிய பொருளாதாரம் மற்றும் மகளிர் மேம்பாடு பற்றி உரையாற்றினர்.
நிகழ்ச்சிக்கு சௌரிராஜன் மற்றும் காந்தி கண்ணதாசன் தலைமை ஏற்றார்கள். சிறப்பு விருந்தினராக .A.G. மௌரியா (Retired IPS Officer) அவர்கள், திரு. முரளி அப்பாஸ், திருமதி. கமீலா நாசர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். இக்கூட்டத்தில் ஏராளமான மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்