மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் சேவை முகாமை பொதுச் செயலாளர் ஏ.ஜி. மௌரியா தொடங்கி வைத்தார்.!!
சென்னை செப்டம்பர் 15
மக்கள் நீதி மய்யம் தலைவர் நம்மவர் கமலஹாசன் அறிவிப்பின்படி தென் சென்னை கிழக்கு மாவட்டம் மயிலை பகுதி 173 வது வட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மக்கள் சேவை முகாமை பொதுச் செயலாளர் ஏ.ஜி. மௌரியா IPS(Rtd) அவர்களாலும் மக்கள் நீதி மய்யம் மாவட்ட பொறுப்பாளர் கிருபாகரன் தலைமையிலும் மந்தவெளி ஆர் கே நகர் சீனிவாசா அவன்யூ ரோட்டில் மக்கள் சேவை முகாம் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு புதிய பொறுப்பாளருக்கான விண்ணப்பங்களும் உறுப்பினர்கள் அளித்தனர். இம் முகாமை மயிலை மக்கள் நீதி மய்யம் நிர்வாகி கேசவன் ஏற்பாடு செய்திருந்தார். இந்த மக்கள் சேவை முகாம் ஒருங்கிணைப்பை நிர்வாகிகள் யாதேஷ், பைக் ரமேஷ், வேணு, சேகர் மற்றும் இந்த மக்கள் சேவை உங்களுக்கு ஒத்துழைப்பு அளித்த ராஜேந்திரன், ஆளவந்தான் லோகு, வீராச்சாமி, பிரகாஷ், மூர்த்தி, கோடம்பாக்கம் சண்முகம், சைதை பிரவீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த மக்கள் சேவை முகாமில் பொது மக்களுக்கான ரேஷன் அடையாள அட்டை ஆன்லைனில் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது, மற்றும் ஆன்லைனில் வாக்காளர் அடையாள அட்டை, வாக்காளர் அட்டையில் வாக்காளர்கள் பெயர் திருத்தம், பெயர் மாற்றம், முகவரி திருத்தம் ஆகியவை செய்யப்படுகிறது. இந்த மக்கள் சேவை முகாமில் ஏராளமான அப்பகுதி மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.