தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கத்தின் மாநில தலைவர் ஜே.பி. செல்வம் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு தமிழ்நாடு கார் ஓட்டுநர் நல சங்கம் சார்பாக திருவல்லிக்கேணி சிவராஜபுரத்தில் நிலவேம்பு கஷாயம், மற்றும் நலத்திட்ட உதவிகள் பெண்களுக்கு புடவைகள், ஆண்களுக்கு வேட்டி லுங்கிகள் இன்று மாநில தலைவர் ஜே.பி. செல்வம் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கார் ஓட்டுனர் நல சங்கம் மூத்த நிர்வாகிகள் சத்தியேந்திரன், ஜெயக்குமார், ஏ. ராஜா, கே.கண்ணன், கார்த்தி, ரமேஷ், கமலகண்ணன், மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.