சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ஆலோசனை நடத்தினார். இரண்டு மணி நேர ஆலோசனைக்கு பிறகு புறப்பட்ட ரஜினி அவரது வீடு அமைந்துள்ள சென்னை போயஸ் கார்டனில் தனது இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார்.அரசியல் கட்சி தொடங்குவது தொடர்பாக தான் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அது குறித்து ஒரு ஆண்டுக்கு பின்னர் தனது ரஜினி மக்கள் மன்ற மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவித்தார் என ஆலோசனை நிறைவாக இருந்ததாகவும் மாவட்டச் செயலர்களின் கேள்விக்கு திருப்தியாக பதில் அளிப்பதாக தெரிவித்தார் அதே நேரத்தில் தன்னை பொருத்தவரை இந்த கூட்டம் ஒரு விஷயத்தில் ஏமாற்றமே அளித்ததாக தெரிவித்தார். மேலும் குடியுரிமை திருத்த சட்ட மசோதா தொடர்பாக இஸ்லாமிய மதகுருமார்கள் தன்னை சந்தித்த நிலையில் அவர்கள் தன்னிடம் அன்பு அமைதி சகோதரத்துவம் நிலவ வேண்டும் எனவும் இதற்கு உதவி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார் அதற்குத்தான் கட்டாயமாக உதவுவதாகவும் குடியுரிமை சட்ட திருத்ததொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமரை சந்திக்க மத குருமார்களுக்கு தான் வலியுறுத்தியதாகவும் அதற்கு தன்னால் முடிந்த உதவியை செய்வதாகவும் தெரிவித்திருந்தார் மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து காலம்தான் பதில் சொல்லும் எனவும் தெரிவித்தார் மேலும் இன்றைய கூட்டத்தில் *தனக்கு ஏமாற்றம் ஒரு விஷயத்தில் கிடைத்ததாக குறிப்பிட்ட நடிகர் ரஜினிகாந்த் அது குறித்து தான் பின்னர் தெரிவிப்பதாக கூறினார்.