சுகாதாரத்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாம் இன்று நடந்தது.!!
சுகாதாரத்துறை சார்பாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும்
இரத்த அழுத்தம்,சர்க்கரை அளவு சரி பார்க்கப்பட்டு, மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளும் வழங்க பட்டது. மேலும் காய்ச்சலை தவிர்க்க நிலவேம்பு குடிநீர் வழங்க பட்டது. செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
தொடர்ந்து செய்தித்தாளர்களை சந்தித்த மருத்துவ கல்வி இயக்குனர் நாராயண பாபு அவர்கள்
தட்பவெட்ப கால சூழல் மாற்றத்தினால் பலரும் காய்ச்சலில் அவதிப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், இரவும் பகலுமாய் பல்வேறு இடங்களில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் உடல்நலனை பாதுகாத்திடும் வகையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அறிவுறுதலின் பேரில் பத்திரிகையாளர்களுக்கு இரத்த அழுத்த பரிசோதனை , மருத்துவ ஆலோசனை மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கி வருவதாகவும், இனி மாதம் தோறும் இது போன்ற மருத்துவ முகாம்கள் பத்திரிக்கையாளர்களுக்காக நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். விரைவில் முழுமையான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெறும் என்றும் உறுதியளித்தார். இம்மருத்துவ முகாமில் சென்னை பத்திரிகையாளர் சங்க மூத்த நிர்வாகிகள் அன்பழகன்,அசத்துல்லா, பாரதி தமிழன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள், கலந்து கொண்டனர்