சென்னையில் திருவையாறு 2019 – பருவம் 15*
18 டிசம்பர் 2019 முதல் 25 டிசம்பர் 2019 வரை
காமராஜர் அரங்கம், சென்னை
சென்னை காமராஜர் அரங்கில் சென்னையில் திருவையாறு சங்கீத நாட்டிய வைபவத்தின் துவக்க விழா, இசைக்கலைஞர்கள், பாடகர்கள்
இணைந்து பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாட 18 டிசம்பர் 2019 (புதன்கிழமை) அன்று கோலாகலமாக துவங்கியது.
இந்த விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், பிண்ணனி பாடகி பத்மபூஷண் டாக்டர் பி.சுசீலா, இந்திய
மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவர் தேவநாதன் யாதவ், ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியின் முக்கிய நிகழ்வாக கவியரசு கண்ணதாசன் அவர்களின் திருவுருவ மெழுகுச் சிலையை பி. சுசீலா அவர்கள் திறந்து வைத்தார். மேலும் விழாவில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மகன் காந்தி கண்ணதாசன், எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி என்ஜினியரிங் கல்லூரி இயக்குநர் சுப்பையா பாரதி, ட்ரான்ஸ் இந்தியா ரிசார்ட்ஸ் சேர்மன் மாரிமுத்து, வேல்ஸ் பல்கலைக் கழக துணைத்தலைவர் ஜோதி முருகன், தகவல் உரிமை ஆணையத்தின் கண்காணிப்பாளர் பிரதாப்குமார், இசைத்துறை எழுத்தாளர் ஹரி கேசநல்லூர் வெங்கட்ராமன், அருள்முருகன் குரூப் ஆஃப் கம்பெனிஸ் இயக்குநர் ராமமூர்த்தி, ட்ரீம்ஸ் சொல்யூஷன் நிறுவன இயக்குநர் ராம் விக்னேஷ், ஆந்திரா வங்கி முன்னாள் துணை இயக்குநர் மணி, எம் 6 நிறுவன இயக்குநர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்
துவக்க விழாவிற்கு பின்னர் அனில் ஸ்ரீனிவாசன் அவர்களின் பியனோ இசையில் பின்னணி பாடகர்கள் சைந்தவி, சத்யபிரகாஷ் ஆகியோரின்
இசை நிகழ்ச்சியுடன் இனிதே சென்னையில் திருவையாறு இசைவிழா தொடங்கியது.
பின்னர் இரவு 8.00 மணிக்கு கர்நாடக இசைப் பாடகி மகதி அவர்களின் வாய்ப்பாட்டு இசை நிகழ்ச்சியுடன் சென்னையில் திருவையாறு
இசைவிழாவின் முதல் நாள் நிகழ்ச்சி நிறைவுற்றது.
சென்னையில் திருவையாறு இசை நிகழ்ச்சியில் ரசிகர்கள் அனைவரும் கர்நாடக சங்கீத இசையை கேட்டு, கண்டுகளிக்க வசதியாக இந்த
ஆண்டு முதல் சென்னையில் திருவையாறு இசை விழாவில் நடைபெறும் அனைத்து இசை நிகழ்ச்சிகளுக்கும் நுழைவுச் சீட்டு இல்லாமல்
அனுமதி இலவசமாக்கப்பட்டுள்ளது.
எனவே இசை ரசிகர்களும் அனைவரும் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக்கொண்டு அனைத்து இசை நிகழ்ச்சிகளையும்
கண்டுகளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இத்துடன் இசை நிகழ்ச்சிகளின் அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.
*சென்னையில் திருவையாறு சங்கீத நாட்டிய விழா அட்டவணை*
*19 டிசம்பர் 2019 – வியாழக்கிழமை*
காலை 7.00 மணி நாமசங்கீர்த்தனம் – உடையாளூர் கல்யாணராமன்
காலை 8.30 மணி ஆண்டாள் கல்யாணம் ( ) – வனிதா சுரேஷ், சௌம்யா ஆச்சார்யா
காலை 9.45 மணி வாய்ப்பாட்டு – காரைக்கால் ஜெய்சங்கர்
காலை 11.00 மணி வாய்ப்பாட்டு – பாலக்காடு ராம்பிரசாத்
மதியம் 1.00 மணி வாய்ப்பாட்டு – ஸ்ருதி எஸ். பட்
மதியம் 2.45 மணி வாய்ப்பாட்டு (சாய்பாபா பாடல்கள்) – டாக்டர் கணேஷ்
மாலை 4.30 மணி வாய்ப்பாட்டு – கர்னாடிகா பிரதர்ஸ், செங்கோட்டை ஹரி
இரவு 7.15 மணி வாய்ப்பாட்டு – உன்னிகிருஷ்ணன்
*20 டிசம்பர் 2019 – வெள்ளிக்கிழமை*
காலை 7.00 மணி சொற்பொழிவு – கடையநல்லூர் துக்காராம் கணபதி
காலை 8.30 மணி பரதநாட்டியம் – ஸ்ரீ அன்னை நாட்டியாலயா
காலை 9.45 மணி பரதநாட்டியம் – பத்மினி கிருஷ்ணமூர்த்தி
காலை 11.00 மணி வாய்ப்பாட்டு – சேர்த்தலை ரங்கநாத சர்மா
மதியம் 1.00 மணி பரதநாட்டியம் – நிஷா தேவி
மதியம் 2.45 மணி வாய்ப்பாட்டு – சுசித்ரா, வினையா & வித்யா
மாலை 4.30 மணி வாய்ப்பாட்டு – சந்தீப் நாராயணன்
இரவு 7.15 மணி வாய்ப்பாட்டு – அபிஷேக் ரகுராம்
*21 டிசம்பர் 2019 – சனிக்கிழமை*
காலை 7.00 மணி பக்தி சொற்பொழிவு – மங்கையர்க்கரசி
காலை 8.30 மணி பரதநாட்டியம் – குரங்கனி நிஹாரிகா பெரியசாமி
காலை 9.45 மணி வாய்ப்பாட்டு – கலா ஐயர்
காலை 11.00 மணி வாய்ப்பாட்டு – அனந்து
மதியம் 1.00 மணி பரதநாட்டியம் – நாட்டியரஞ்சனி
மதியம் 2.45 மணி பரதநாட்டியம் – கவிதா ராமு
மாலை 4.30 மணி வீணை – ராஜேஷ் வைத்யா, மேண்டலின் – யு. ராஜேஷ்
இரவு 7.15 மணி ஃப்யூஷன் – உமையாள்புரம் சிவராமன், ஸ்டீபன் டெவசி, பரத் சுந்தர்
*22 டிசம்பர் 2019 – ஞாயிற்றுக்கிழமை*
காலை 7.00 மணி வாய்ப்பாட்டு – ருக்மணி ரமணி
காலை 8.30 மணி பரதநாட்டியம் – புவனேஸ்வரி வி. கௌசிக்
காலை 9.45 மணி பரதநாட்டியம் – பூஜா சீனிவாச ராஜா
காலை 11.00 மணி வாய்ப்பாட்டு – ஷீலா உன்னிகிருஷ்ணன்
மதியம் 1.00 மணி பரதநாட்டியம் – ஸ்ருதிலேகா
மதியம் 2.45 மணி வயலின் – லலிதா நந்தினி
மாலை 4.30 மணி வாய்ப்பாட்டு – அருணா சாய்ராம்
இரவு 7.15 மணி வாய்ப்பாட்டு – திருச்சூர் பிரதர்ஸ்
*23 டிசம்பர் 2019 – திங்கள்*
காலை 7.00 மணி சொற்பொழிவு – தீபிகா
காலை 8.30 மணி வாய்ப்பாட்டு – தெய்வநாயகி ஹரிஹரன், வசந்தி ஹரிஹரன்
காலை 9.45 மணி பரதநாட்டியம் – ஸ்ரீ காலாஸ்ரீ நடனப்பள்ளி நிரஞ்சனா
காலை 11.00 மணி வயலின் – மணிபாரதி
மதியம் 1.00 மணி வாய்ப்பாட்டு – அட்லாண்டா சகோதரிகள் ஸ்ரீவர்ஷினி & நித்யஸ்ரீ
மதியம் 2.45 மணி ஃப்யூஷன் – ப்ரவாகம்
மாலை 4.30 மணி வயலின் & வாய்ப்பாட்டு – குமரேஷ், ஜெயந்தி குமரேஷ்
இரவு 7.15 மணி பரதநாட்டியம் – பிக்பாஸ் அபிராமி
*24 டிசம்பர் 2019 – செவ்வாய்*
காலை 7.00 மணி வாய்ப்பாட்டு – சுதா ராஜா
காலை 8.30 மணி வாய்ப்பாட்டு – சஷாங்க்
காலை 9.45 மணி பரதநாட்டியம் – ரசிகா டான்ஸ் அகாடமி – சிட்னி
காலை 11.00 மணி பரதநாட்டியம் – சுபத்ரா மாரிமுத்து
மதியம் 1.00 மணி பரதநாட்டியம் – வேலம்மாள் பள்ளி மாணவிகள்
மதியம் 2.45 மணி வீணை – ரேவதி கிருஷ்ணா
மாலை 4.30 மணி வாய்ப்பாட்டு – எஸ். செளம்யா
இரவு 7.15 மணி வாய்ப்பாட்டு – சுதா ரகுநாதன்
*25 டிசம்பர் 2019 – புதன்*
காலை 7.00 மணி வாய்ப்பாட்டு – டாக்டர் கணேஷ்குமார்
காலை 8.30 மணி பாரதியார் – மஹதி அகாடமி மாணவர்கள்
காலை 9.45 மணி பரதநாட்டியம் – திருக்குறள் – மயூரி அகாடமி
காலை 11.00 மணி வீணை – நிர்மலா ராஜசேகர்
மதியம் 1.00 மணி வாய்ப்பாட்டு – அநேகா சீனிவாசன் ஆஸ்திரேலியா
மதியம் 2.45 மணி வாய்ப்பாட்டு – ஷோபா சந்திரசேகர்
மாலை 4.30 மணி வாய்ப்பாட்டு – நித்யஸ்ரீ மகாதேவன்
இரவு 7.15 மணி வாய்ப்பாட்டு – கார்த்திக் ஆகியோர் பங்கேற்கும்்் சென்னையில் திருவையாறு சென்ற வருடம்் போலவே இந்த வருடமும் சிறப்பாக நடைபெறும்் என்று எதிர்பார்க்கப்படுகிறது.