குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமான மாணவ- மாணவிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார்.
மாணவர்கள் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், சட்டங்கள் மக்களுக்கு பயன்படவில்லை என்றாள் அவை மாற்றப்பட வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என பேட்டி அளித்தார்