பெட்ரோல், டீசல் விலைகள் லிட்டருக்கு 10 பைசா வீதம் குறைந்தன

சென்னை

10 நாட்களுக்குப் பிறகு பெட்ரோல் விலை லிட்டருக்கு 10 பைசா குறைந்துள்ளது. புதுடெல்லியில் மட்டும் 11 பைசா குறைந்துள்ளது.

நாட்டின் நான்கு மிகப்பெரிய மாநகரங்களில் கடந்த 10 நாட்களாக பெட்ரோல் விலை ஒரு ரூபாய் மற்றும் 50 பைசா என உயர்ந்தது. டீசலின் விலை 13-15 பைசா அளவிற்கு ஞாயிற்றுக்கிழமைகளில் இருந்தன.

எரிபொருள் விலை கடந்த ஜூன் 5 லிருந்து மேல்நோக்கியே போய்க் கொண்டிருந்தது. குறைவதற்கான அறிகுறியே இல்லாமல் இருந்தது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் இணையதள தகவலின்படி ஜூலை 11 மற்றும் ஜூலை 15 (ஞாயிறு) ஆகிய நாட்களில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஆனால் இன்றைய நிலவரப்படி அவற்றில் சிறிது மாற்றம் ஏற்பட்டுள்ளது.

புதுடெல்லியில், இன்றைய நிலவரப்படி பெட்ரோல் ரூ.76.84க்கு வந்துள்ளது. இது ரூ.76.95 எனும் முந்தைய விலையிலிருந்து லிட்டருக்கு 11 பைசா வீதம் குறைந்துள்ளது.

மற்ற முக்கிய நகரங்களான கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் பெட்ரோல் விலை முறையே லிட்டருக்கு ரூ.79.51, ரூ.84.22 மற்றும் ரூ.79.76 என குறைந்துள்ளது. இந்நகரங்களில் முந்தைய விலையின்படி முறையே, லிட்டருக்கு ரூ.79.61, ரூ.84.33 மற்றும் 79.87 என்றிருந்தது.

போக்குவரத்து எரிபொருளின் உள்நாட்டு விலையானது சந்தை சக்திகளாலும் உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகளாலும் நிர்ணயிக்கப்படுகிறது. மற்றும் மாறிக்கொண்டிருக்கும் விலையிடல் முறையின் படியும் இதன் விலை நிர்ணயம் தினசரி அடிப்படையில் மாற்றப்படுகிறது.

உலகம் முழுவதற்கும் பெட்ரோல் விலை நிர்ணயத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலை கடந்த ஒரு வாரத்தில் வெகுவாகக் குறைந்துவிட்டது. இதன் விலை தற்போது ஒரு பேரலுக்கு 75 டாலர் என்று குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *