தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று1,000 புத்தகங்களை சென்னை எழும்பூர்,
கன்னிமாரா பொது நூலகத்திற்கு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சரும் தி.மு.க.தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் தன்னை சந்தித்து வாழ்த்துகூற வருபவர்கள் பொன்னாடை, பூங்கொத்துகளை தவிர்த்து அறிவுசார் புத்தகங்களை வழங்கிட வேண்டுமென வைத்த வேண்டுகோளினையடுத்து, தனக்கு வழங்கப்பட்ட 80,000க்கும் மேற்பட்ட புத்தகங்களை தமிழகத்தில் உள்ள பல்வேறு நூலங்களுக்கு வழங்கி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாக, தன்னை வாழ்த்துக் கூற வருபவர்கள் அளித்த புத்தகங்களில் 1,000 புத்தகங்களை சென்னை, எழும்பூர், கன்னிமாரா பொது நூலகத்திற்கு, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், இன்று (3.7.2021), மாலை, பொது நூலக இயக்கக இணை இயக்குநர் கே.செல்வக்குமார் மற்றும் கன்னிமாரா பொது நூலக துணை நூலகர் எம்.கணேஷ் அவர்களிடம் வழங்கினார்.
உடன் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன், தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் மற்றும் பேராசிரியர் ஆய்வக நூலகர் அ.சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.