தமிழ் டிவி செய்திவாசிப்பாளர் செளதா மணி நடத்தும் “மணிகண்டன் சமூக அறக்கட்டளை” மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்திய மாபெரும் மருத்துவ முகாம் சென்னையில் நடைபெற்றது.!!
சென்னை பிப்ரவரி 16
தமிழ் டிவி செய்திவாசிப்பாளர் செளதா மணி நடத்தும் “மணிகண்டன் சமூக அறக்கட்டளை” மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து நடத்திய, பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்த இலவச மருத்துவ முகாம் தி.நகர் கிரியப்பா ரோட்டில் நடைபெற்றது. முகாமை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல கணேசன் துவக்கி வைத்தார். மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயால் பெண்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் நிலையில், அவர்களுக்கு பரிசோதனை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த முகாமில் மகப்பேறு மருத்துவர் சாந்தா ராமராவ், புற்றுநோய் சிகிச்சை நிபுணர் அனிதா மற்றும் குடலியல்- லேப்ராஸ்கோப்பி சிகிச்சை நிபுணர் ராம்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிகிச்சை அளித்தனர். மேலும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளான மாதவிடாய் கோளாறுகள், வயிற்றுவலி, உதிரப்போக்கு மற்றும் சர்க்கரை நோய், உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகளும் கண்டறிந்து ஆலோசனையும் மருந்தும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 300 -க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்பெற்றனர். முகாமில் கலந்து கொண்ட ஏராளமான பொதுமக்களுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினை இருப்பதால் அடுத்து அப்பகுதியில் இலவச கண்மருத்துவ முகாம் நடத்தவுள்ளதாக டிவி செய்தி வாசிப்பாளர் செளதா மணி தெரிவித்தார்.