மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு இஸ்லாமிய
அமைப்பினர் சந்தித்துப் பேசினர். இவர்களுடன் கேரள முதல்வர்.பினராயி விஜயன்அறிவுறுத்தலின் பேரில் சென்னையில் உள்ள மலபார் முஸ்லீம்
அசோசியேசனைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக,முதல் கட்சியாக மக்கள் நீதி மய்யம் கட்சி உச்சநீதி
மன்றத்தில் வழக்கு தொடுத்தமைக்கு தங்களின் நன்றியினை
தெரிவித்துகமல்ஹாசனிடம் தெரிவித்துக் கொண்டனர்.
தொடர்ந்து அதற்கு எதிர்ப்பான நிலையை மேற்கொண்டிருக்கும் கமல் அவர்களுக்கு தங்களின்
பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.மேலும் அனைத்து மக்களும் பங்கெடுக்கும் போராட்டமாக இது மாறுவதற்கு ஆதரவு
வேண்டுமென்று கமல் ஹாசன் அவர்களை கேட்டுக்கொண்டனர். இச்சந்திப்பின்போது கமல்ஹாசன் கூறியதாவது
எப்போதும் எல்லா வகையிலும் இந்திய இறையாண்மைக்கும், இந்திய மக்களின்
ஒற்றுமைக்கும் உறுதுணையாக தான் இருப்பேன் என்று உறுதி என கூறினார்.
போராட்டம் உறுதியாகவும் வலிமையாவும் நடந்திட வேண்டும், அதே நேரம் எந்த
வகையிலும் அதில் வன்முறை புகுந்து விடக்கூடாது என்பதில் நாம் அனைவரும் கவனமாக
இருக்கவேண்டும் என்று கூறினார்.அவரின் கருத்துக்கு அனைத்து இஸ்லாமிய அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து
தங்கள் ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர் எங்கள் நலன்களை காக்கும் அரணாக இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கும் கமலஹாசன் அவர்களுக்கும் இருக்கும் என்று
தெரிவித்தனர்.இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் விவரம்
கலந்து கொண்ட அமைப்பினர்
1. இறையடியார் காஜா மொய்தீன் (மாநிலத்தலைவர் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக்
கழகம்)
2. மௌலவி சுலைமான் மன்ஃபி (அமைப்பாளர், தமிழ்நாடு அஹ்லே சுன்ன ஜமாத்
கூட்டமைப்பு)
3. அ.அக்ரம்கான் (தலைவர்.தமிழ்நாடு அஹ்லே சுன்னத் ஜமாத் கூட்டமைப்பு)
4. மௌலவி நஜீர் அஹமது காசிமி (மாநில உலமாக்கள் பேரவை)
5. மௌலவி சையத் பிலால் ஆமிரி (சுன்னத் ஜமாத் பேரமைப்பு)
6. M.S.அப்துல்லா (ஹிமாயத்துல் முஸ்லிமீன்)
7. Dr.MD.சாதத்துல்லா (செயலாளர்,திருவொற்றியூர் ஜாமியா மஸ்ஜித்) (நிறுவனர்,
சமாதானம் அறக்கட்டளை)
8. மௌலானா மு.க.சிராஜுதின் (தலைவர்.புளியந்தோப்பு மஸ்திதுகளின் கூட்டமைப்பு)
9. J முனிர்ஜான் (ஹிமாயத்துல் முஸ்லிமீன்)
10. M.P.நாசர் தலைவர் (சுன்னத் ஜமாத் பேரியக்கம்)
கீழக்கரை பகுதி இஸ்லாமிய அமைப்பினைச் சார்ந்த,
திரு.சாகூல் ஹமீது
திரு.நிஜாம்
திரு.முஜாஃபிர்
திருமதி. ஷெரிஃபா (பள்ளி முதல்வர்)
திரு. AMR. ரஃபிக்
மற்றும்
மலபார் முஸ்லீம் அசோசியேசன், சென்னை. உள்பட ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.