மயிலாப்பூர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டி.என்.சந்திரசேகரன் ஏற்பாட்டில் மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.!!

சென்னை

மயிலாப்பூர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டி.என்.சந்திரசேகரன் ஏற்பாட்டில் மறைந்த முதல்வர் அம்மா ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் நலத்திட்டங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.!!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மாவின் 72வது பிறந்த நாளையெட்டி மயிலாப்பூர் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் டி.என்.சந்திரசேகர் ஏற்பாட்டில் லஸ் கார்னர் காமதேனு திரையரங்கம் எதிரில் நடைபெற்ற நலத்திட்டங்கள் நிகழ்ச்சியில் பிரமாண்ட கேக் வெட்டி ஏழைகளுக்கு நலத்திட்டங்களை தென்சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் விருகை வி.என்.ரவி, அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்.பியுமான வா.மைத்ரேயன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெ.ஜெயவர்த்தன் ஆகியோர் வழங்கினார்கள். பிரமாண்ட விழாவில் நூற்றுக்கணக்கான ஏழைகளுக்கு கேக், அறுசுவை உணவுகள், மரக்கன்று மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதிமுக நிர்வாகிகள் மயிலாப்பூர் பகுதி மாணவரணி செயலாளர் பி.கணேஷ் பாபு, பகுதி கழக தலைவர் கே.நரேஷ்குமார், வட்ட செயலாளர்கள் பி.டி.சி வீரா, டி. ப்ரீடாதர்மேந்திரன், பண்டரிநாதன், காசிநாதன் லஸ் ஆறுமுகம், தோட்டம் குமார்,பி. மஞ்சுளா, ஜி.எஸ்.ராஜன், சி.எஸ்.மணியன், மற்றும் ஏராளமான தொண்டர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *