தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை டெல்லி சென்றார் அங்கு பிரதமரை சந்தித்த உடன் அவர் கூறியதாவது பிரதமருடனான சந்திப்பு மகிழ்ச்சிகரமாகவும் மன நிறைவையும் தந்தது. தமிழக முதல்வரானதற்கு முதலில் வாழ்த்து சொன்னார் பிரதமர். எந்நேரமும் என்னைத் தொடர்புகொள்ளலாம் என்று தெரிவித்தார். நீட் ரத்து, நிதித் தேவை, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.அதன் பின்னர்
பிரதமர் மோடியைச் சந்தித்தபின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்.
அப்போது அவர் கூறியதாவது:
வருவதற்கு முன் பிரதமர் மோடியைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். கரோனா பெருந்தொற்று பரவி இருந்த காரணத்தால் பிரதமரைச் சந்திக்க முடியவில்லை, தற்போது தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கரோனா தொற்று குறைந்துள்ளது. அதனால் நேரம் கேட்டேன். பிரதமர் அனுமதி அளித்த நிலையில் இன்று சந்தித்தேன்.அவர்கள் நடத்திய சந்திப்பில்நீட் தேர்வு,ஜிஎஸ்டி பிரச்சனை,தமிழகத்தில் தேவையான அளவு தடுப்பூசி வழங்குவது பற்றியும் பேசினேன் என தெரிவித்தார்.