திமுக கூட்டணியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.!!

தமிழகம்

திமுக கூட்டணியில் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.!!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் தேசிய பொதுச்செயலாளர் வேணுகோபால்,மற்றும் காங்கிரஸ் தமிழக தலைவர் அழகிரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டு ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோர் கையொப்பமிட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 9 தொகுதிகளும் புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இதைத் தொடர்ந்து மு.க ஸ்டாலின் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
திமுகவிற்கு தோழமையாக உள்ள கட்சிகளுடன் நாளை முதல் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கும் என்றும் இந்த பேச்சுவார்த்தை விரைவில் தொகுதி பங்கீடு மற்றும் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பது குறித்து முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். இடைத்தேர்தலில் போட்டியிடுவது மற்றும் அதற்கு இந்த கட்சிகள் ஆதரவு தொடர்பாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் முடிவு செய்யப்படும். தேமுதிகவுடன் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் அப்படி நடைபெற்றால் அது தொடர்பாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதிமுக, பாமக,கூட்டணி மக்கள் பண நல கூட்டணியாக பார்க்கிறார்கள் என்று விமர்சித்து வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *