ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நடத்தும் கிரேஸி க்ரூ அமைப்பு நடத்திய கோவிட்19 மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணாநகரில் நடந்தது.!!
கிரேஸி க்ரூ”
கோவிட் 19 மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்க ஒரு சாலை நிகழ்ச்சி
ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நடத்திய கிரேஸி க்ரூ – சென்னை அண்ணா நகர் மற்றும் அதை
சுற்றியுள்ள பொதுமக்களிடையே கோவிட் 19 மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை
உறுவாக்கும் ஒரு சாலை நிகழ்ச்சி அண்ணாநகரில் நடந்தது. இதில்
ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நிறுவனத்தின் தலைவர் Rtn. திருமதி V. ருக்குமணி, கிரேட்டர்
சென்னையின் கூடுதல் போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து) டாக்டர் N. கண்ணன் IPS
சென்னையின் அண்ணா நகர் வளைவு ரவுண்டானா மற்றும் திருமங்கலத்தில் நடந்தது. இதில்
முதன்மை விருந்தினராக Rtn. PGD. ஐசக் நாசர் மாவட்ட கவுன்சிலர் RID 3232, கவுரவ
விருந்தினர் டாக்டர் N. கண்ணன் IPS கூடுதல் போலீஸ் கமிஷனர் (போக்குவரத்து), கிரேட்டர் சென்னை
மற்றும் சிறப்பு அழைப்பாளர் Rin. G. முருகேஸ், இயக்குநர் – சுற்றுசூழல் மற்றும் பேரிடர் மேலாண்மை RID
3232 ஆகியோர் கலந்துகொண்டனர் ஐந்து திருநங்கைகள் கொண்டு இயங்கும் அமைப்புக்கு
தேவையான பயிற்சிகளை ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் சாலைகளில் சாலை விழிப்புணர்வு
செய்வது தொடர்பான பயிற்சிகளை அளித்து வருகின்றது. சிறப்பு சமிக்ஞைகள் வரும் போது பதிவு
செய்யப்பட்ட ஒலிப்பதிவிற்கு ஏற்ப கைப்குறிகைகளின் மூலம் பொதுமக்களை ஈர்க்க வழிவகை செய்வர்.
மேலும் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் முகம் மற்றும் கைகைளை
தூய்மை செய்தல் ஆகியவைகளின் அவசியங்களைப் பற்றியும் இவர்கள் எடுத்துரைப்பார்கள் பச்சை
சமிக்ஞைகள் வரும் போது அவர்கள் போக்குவரத்து சமிக்ஞைகளுக்கு கட்டுப்பட்டு பொதுமக்களுக்கு
வழிவிடுவர். இதனை போன்றே தலைக்கவசம், சீட் பெல்ட் அணிதலின் அவசியம் பற்றியும் ஓர்
விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர்.
ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் என்பது பொது மற்றும் மனிதாபிமான சேவைகளை
வழங்குவதற்காக ஒன்றினைக்கப்பட்ட தொழில் துறை மற்றும் வணிகத் தலைவர்களின் குழுவாகும். நம்
சமுதாயத்தை வாழச் சிறந்த இடமாக மாற்ற பற்பல முயற்சிகளை எடுத்துள்ளனர்.
ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல்ஸ் நிறுவனத்தின் தலைவர் Rtn. திருமதி V. ருக்குமணி, “கிரேஸி க்ரூ”
செயல்திட்டத்தின் நிர்வாகத் தலைவர் Rtn, திருமதி. ஜெயலதா மார்டின், செயலர் Rtn, திரு. ராஜ்குமார்,
இயக்குநர் Rtn. திரு. ஸ்ரீநிவாசன் (சமூக வளர்ச்சி), மற்றும் இயக்குநர் Rtn. திருமதி. ஹசீனா சையத்
(ஆரோக்கியம்) போன்றோர் இக்குறுகிய காலத்தில் ஆர்வத்தை தூண்டும் விதமான நிகழ்ச்சிகளை
நடத்துவதற்கு பெரும் ஒத்துழைப்பை நல்கிய கிரேட்டர் சென்னை போக்குவரத்து துறையினருக்கு
இந்த அமைப்பினர் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.