தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம்வழங்கும் நிகழ்வினை நாளை தொடங்கி வைக்கிறார்.!!
ரேஷன் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
கெரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழகததில் உள்ள அனைத்து நியாய விலை ரேஷன் கடைகள் மூலம்,இலவசமாக முகக் கவசம் வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார்.
அதன்படி, நாளை முதல் தமிழகத்திலுள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச முகக்கவசம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்.
அதன்படி, வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும் தலா இரண்டு முகக்கவசங்கள் என்ற கணக்கில் மறுபயன்பாடு செய்யக்கூடிய13 கோடியே 48 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளது.இதை பொதுமக்கள்ரேஷன் கடைகளில்சமூக இடைவெளிவிட்டுவாங்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.