இந்திய கிரிக்கெட் வீர்ர் முகமத் கைஃப் அனைத்து தர சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இதுகுறித்து கைஃப் தனது ட்விட்டர் பக்கத்தில், ” நான் கிரிக்கெட் விளையாட ஆரமித்தப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் தொப்பியை அணிந்து ஆடுவது என்பது கனவாக இருந்தது.
நான் இந்திய அணிக்காக களத்தில் இறங்கி விளையாடியது மிகவும் அதிருஷ்டமான ஒன்று. எனது வாழ்வில் 190 நாட்கள் எனது நாட்டுக்காக விளையாடி இருக்கிறேன். அனைத்து கிரிக்கெட்டி போட்டியிலிருந்து நான் ஓய்வு பெறுகிறேன் என்பதை அறிவிப்பதற்கு இன்றே ஒரு பொருத்தமான நாள். அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.
37 வயதான முகமத் கைஃப், இந்திய அணிக்காக 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 624 ரன்னும், மற்றும் 125 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 2753 ரன்களையும் எடுத்திருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்துக்கு ரஞ்சி கோப்பையை வழி நடத்தி பெற்று தந்திருக்கிறார் கைஃப்.அடுத்த கட்ட நகர்வுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.