சுதந்திர தினத்தை முன்னிட்டு
டோட்டல் ஏ.ஆர் என்ற இலவச
செயலி அறிமுகம்
சென்னை.ஆக.11-
ஹாலோபண்டிட்ஸ் நிறுவனம்
டப்ளின், ஓஹையோவில் தலைமை
அலுவலகமும், சென்னையில் கிளை அலுவலகமும் செயல்படுகிறது. பல துறைகளில், பல
நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாட்டில் ஹாலோட்பண்டிட்ஸின் பங்கு
நிறைந்துள்ளது.
கோவிட-19 தொற்றைக் கட்டுப்படுத்த சமூக விலகல் வழிமுறைகள் இன்னும் அமலில்
இருப்பதால் பல கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால்,
தொழில்நுட்ப நிறுவனமான ஹாலோபண்டிட்ஸ், கொண்டாட்டங்களை மக்களிடம்
கொண்டு வர, ஒரு இலவச ஆக்மெண்டட் ரியாலிடி அனுபவத்தை உருவாக்கியுள்ளது.
“டோட்டல் ஏ.ஆர்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த செயலியால், உங்கள்
ஸ்மார்ட்ஃபோன் அல்லது டாப்லெட் மூலம் வானில் கண்ணைப் பறிக்கும் வண்ணமயமான
காட்சிகளை காட்ட முடியும். வானவேடிக்கையை நேரில் பார்க்கும் அனுபவத்தை
ஒவ்வொருவருக்கும் தரும்.
விடுமுறை நாளை வீட்டில் கழிக்கும் பலருக்கும் இந்த செயலி.
வானவேடிக்கை காட்சிகளோடு சேர்த்து மற்ற காட்சிகளையும் ஆக்மெண்டட் ரியாலிட்டி அனுபவங்களாக, டோடல் ஏ.ஆர் செயலி, விளம்பரங்களின்றி, இலவசமாகத் தருகிறது.
சுதந்திர தினத்தையொட்டி அழகான இந்திய தேசியக் கொடியைப் பார்க்கலாம்,
வானவில்லை ரசிக்கலாம், அட்டகாசமான ஒளி விளக்குகளின் வரிசை, வானில் மிதக்கும் எண்ணற்ற பலூன்கள் என பல காட்சிகளைப் பார்க்கலாம்.