திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற கட்சித் தலைவராக திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.!!

சென்னை

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டத்தில்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற கட்சித் தலைவராக
மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 6.4.2021 அன்று நடைபெற்ற 16வது தமிழக சட்டப் பேரவைக்கான பொதுத்தேர்தலின் வாக்குகள் 2.5.2021 அன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளி வந்தது. இந்த தேர்தலில் தி.மு.க. 133 இடங்களில் வென்று அறுதி பெரும்பான்மை பெற்றது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று மாலை சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள “கலைஞர் அரங்கில், புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க. உறுப்பினர்கள் நடைபெற்றது.

இக்கூட்டத்தில். கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., அவர்கள் வரவேற்புரையாற்றிட, கழக பொதுச்செயலாளர் .துரைமுருகன் அவர்கள் முன்மொழிந்திட, கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள் வழிமொழிந்திட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற கட்சி தலைவராக .மு.க.ஸ்டாலின் அவர்களை, கழகச் சட்டமன்ற உறுப்பினர் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். இவ்வாறு சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டவுடன், அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மு.க.ஸ்டாலின் அவர்கள், நாளை காலை 10.00 மணி அளவில், தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கடிதத்தினை அளிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *