தமிழகம் முழுவதிலும் உள்ள எம்ஆர்பி செவிலியர் மேம்பாட்டு கூட்டமைப்பினர் சேப்பாக்கத்தில் உண்ணாவிரதம்.!!
சென்னை 9 அக்டோபர்
தமிழக அரசு எம் ஆர் பி செவிலியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் முறையை அமல்படுத்த வலியுறுத்தி ஆயிரக்கணக்கான செவிலியர் மேம்பாட்டு கூட்டமைப்பு சார்பில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இன்று உண்ணாவிரதம் இருந்தனர். இந்த உண்ணாவிரத்தில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான எம்.ஆர்.பி செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை தமிழக அரசு வழங்காமல் காலதாமதம் செய்வதாக தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சுபீன் பேட்டியளித்த போது.
தங்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய ஊதியத்தை தமிழகஅரசு வழங்காமல் தொடர்ச்சியாக புறக்கணிப்பதாக குற்றம்சாட்டிய அவர்,
இதுகுறித்து நீதிமன்றத்தில் முறையிட்டு நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளோம் இருந்தபோதிலும் நீதிமன்ற உத்தரவிற்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என தெரிவித்தார்.
வருகின்ற 15ஆம் தேதி மீண்டும் இந்த வழக்கு வரவுள்ளதாகவும் நீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழகம் முழுவதிலிருந்தும் வந்திருந்த 1000 க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர். சில செவிலியர்கள் தங்கள் குழந்தைகளுடன் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.