மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை அமைத்த சிங்கப்பூர் அருங்காட்சியகம்.!!

சென்னை

ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை அமைத்த சிங்கப்பூர் அருங்காட்சியகம்.!!
1980களில் தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. ரஜினி, கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்திருந்தார். இவர் 16 வயதினிலே, குரு, தர்மயுத்தம், நான் அடிமை இல்லை, சிகப்பு ரோஜாக்கள், மூன்று முடிச்சு உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்திருந்தார்.பின்பு ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து புகழ்பெற்றார் இவர். போனிகபூரை மணந்து ஹிந்தியில் செட்டிலானார்.பின்பு ஹிந்தி சினிமாக்களிலும் நடித்து புகழ்பெற்றார் இவர். போனிகபூரை மணந்து ஹிந்தியில் செட்டிலானார்.கடந்த வருடம் பிப்ரவரியில் துபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மரணமடைந்தார். அவர் தண்ணீரில் மூழ்கி மரணமடைந்தார்.

சில முன்னணி நடிகர் நடிகைகள் பிரபலங்களுக்கு சிங்கப்பூரில் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகம் மெழுகு சிலைகளை வடித்துள்ளது.

மெழுகு சிலைகளில் ஒருவரை பார்ப்பதற்க்கு அச்சு அசலாக அப்படியே இருப்பர்.

ஏற்கனவே மேடம் துசாட்ஸ் நிறுவனம் நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, குயின் எலிசபெத் 2, பாராக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கி சான், அமிதாப் பச்சன், கஜோல், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், மைகேல் ஜாக்சன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் போன்ற பலரது உருவங்களை செதுக்கி வைத்துள்ளது.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் 56வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது மெழுகு சிலையையும் இந்நிறுவனம் நிறுவி உள்ளது. இதற்கு ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இந்நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *