மு.க.ஸ்டாலின்
சென்னை: புதிய 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடத் தொடங்கி இன்றுடன் 6 மாதங்களை கடக்கினறன. அவர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்று 3 வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப்ப பெறக்கோரி தில்லி எல்லையில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் போராட்டம் தொடங்கி 6 மாதங்களாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தால் இதுவரை நூற்றுக்கணக்கான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். மத்திய அரசு விவசாய சங்கங்களுடன் நடத்திய 11 கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித உடன்பாடும் எட்டப்படாத நிலையில், டிராக்டர் பேரணி உள்ளிட்ட போராட்டங்களையும் நடத்திய விவசாயிகள், தங்கள் போராட்டம் 6 மாதத்தை எட்டியதை நினைவுப்படும் வகையில் இன்று புதன்கிழமை நாடு தழுவிய கருப்பு தின போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். 40 விவசாய சங்கங்கள் நடத்தும் இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 13 எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தில்லி எல்லையில் போராட்டத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்படும் எனவும் கிருமி நாசினி முழுமையாக தெளிக்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.