ஏழைகளின் ஊட்டி, மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலின் 176 வது பிறந்த நாள், ஊரடங்கினால் 2வது ஆண்டாக களையிழந்து காணப்பட்டது.
செடி கொடிகளால் சூழப்பட்டதால், கொடிக்கானல் என அழைக்கப்பட்டது தான் பின்னாளில் கொடைக்கானல் என மருவியது.
காடு என பொருள்படும் கானகத்தையும், கொடியையும் சேர்த்து, கொடிக்கானல் என்பது, நாளடைவில் மருவியது.
பச்சை போர்வை போர்த்திய வனத்தில், பறவை, விலங்கினங்கள் கூடி வாழ்ந்து வரும் கொடைக்கானல், மலைகளின் இளவரசியாக இன்றளவும் உள்ளது.
கொடைக்கானலில் கடந்த ஆயிரத்து 845ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் உருவாக்கிய ஓய்வு இல்லத்தில், மே 26ஆம் தேதி வெளி மக்கள் குடியேறினர்.
அந்த ஆண்டை கொடைக்கானல் பிறந்த ஆண்டாக கொண்டாடப்படுகிறது.
நகராட்சி அதிகாரிகளால், ஏற்பாடு செய்யப்படும் இந்த விழாவில், கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், அரசு அதிகாரிகளால், ஆர்வம் காட்டப்படவில்லை.
இதனால், மலைகளின் இளவரசியான கொடைக்கானலின் 176 பிறந்த நாள் கொண்டாடப்படாமல் களையிழந்தது.