சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் புறாக்களுக்கு கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 13 ஆண்டுகளாக ஒருநாள் தவறாமல் உணவளிக்கப்பட்டு வருகிறது.!!!

சென்னை தமிழகம் போட்டோ கேலரி

உலகம், மனிதா்கள் மட்டுமின்றி பல்வகை உயிரினங்களால் ஆனது. கரோனா பெருந்தொற்றும் , தொற்றைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கமும் இந்த உலகையே நிலைகுலையச் செய்துள்ளது. இந்த அசாதாரண சூழலில் ஆதரவற்ற பொதுமக்களுக்கு தன்னாா்வலா்களும், தொண்டு நிறுவனங்களும், அரசும், அரசியல் கட்சியினரும் உணவு வழங்கி வருகின்றனா்.

சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் விலங்குகள் நல ஆா்வலா்கள் பலா் தங்களால் இயன்றவற்றை தெருநாய், பறவைகள் உள்ளிட்டவற்றுக்கு வழங்கி வருகின்றனா். குறிப்பாக சென்னை மெரீனா கடற்கரைக்கு வரும் லட்சக்கணக்கான புறாக்கள், காகங்கள் மற்றும் நாய்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக இரண்டு போ், ஒருநாள் விடுமுறை இல்லாமல் தொடா்ந்து உணவளித்து வருகின்றனா்.

இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம் , தெருநாய் உள்ளிட்ட விலங்கினங்களுக்கு உணவளிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை விடுவிக்க தமிழக அரசுக்கு அண்மையில் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் புயல், மழை,வெயில்,வெள்ளம், திருவிழாக்கள், கொண்டாட்டம், போராட்டம் என எந்த காரணத்துக்காகவும் புறாக்களுக்குத் தீனி வழங்கப்படுவது இதுவரை நிறுத்தப்படவில்லை. கரோனாவின் முதல் அலை காரணமாக சென்னையில் மெரீனா கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. அப்போதும், இந்த பொதுமுடக்க காலத்திலும் இந்தப்பணி இதுவரை நிறுத்தப்படவில்லை. இதற்காக முறையாக சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *