கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு பாராட்டியுள்ளது.!!!

சென்னை

சென்னை ஐகோர்ட்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கிறது என்று சென்னை ஐகோர்ட்டு பாராட்டியுள்ளது.

சென்னை:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் விசாரித்து பல்வேறு இடைக்கால உத்தரவை பிறப்பித்து வருகின்றனர். இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது

அப்போது, தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் தடுப்பூசி மற்றும் மருந்து ஒதுக்கீடு குறித்து மத்திய அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு 650 டன்னாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. கருப்பு பூஞ்சை நோய்க்கான லைசோசோமால் மருந்து போதுமான அளவு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது’ என்று கூறப்பட்டு இருந்தது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘இறந்தவரின் முகத்தை உறவினர்கள் பார்க்கும் விதமாக, முகம் மட்டும் தெரியும் விதமாக உடலை பொதிய வேண்டும்’ என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.

பின்னர் தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள்,

‘‘கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு எடுத்துள்ள அனைத்து நடவடிக்கைகளும் திருப்தி அளிக்கும் விதமாக உள்ளது. அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த சில நாட்களாக வைரஸ் தொற்று பரவல் குறைந்துள்ளது. தொற்றினால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது மிகவும் வருத்தமாக உள்ளது’’ என்று கூறினர். பின்னர் இந்த வழக்கை வருகிற 31-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *