கடலுார் மாவட்டத்தில் பாதிப்பு தினமும் ஆயிரத்தை நெருங்கி விட்ட நிலையில் இதுவரை பாதிப்பு எண்ணிக்கை 46 ஆயிரத்தைக் கடந்து விட்டது. உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது.!!!

மருத்துவம்

கடந்த மாத இறுதியில் 1000 பேர் மட்டுமே சிகிச்சையில்இருந்த நிலையில், தற்போது, வெளி மாவட்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் உட்பட 8,000 பேர் வரை சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் முகாம்களில் உள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் கடலுார் அரசு மருத்துவமனை, சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, சிதம்பரம்,விருத்தாசலம், பண்ருட்டி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்பசுகாதார நிலையங்கள் என 35 இடங்களில் கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுதவிர, மாவட்டத்தில் 7க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், 18 தனிமைப்படுத்தும் முகாம்களில் சாதாரண பாதிப்பு உள்ளவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

திணறும் மாவட்ட நிர்வாகம்மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 3,800 படுக்கை வசதிகள் உள்ளன. இதில், அரசுமருத்துவமனைகளில் 661, தனியார் மருத்துவமனைகளில் 100 என,761 ஆக்சிஜன் படுக்கை வசதிகள் உள்ளன.

ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஒரு சிலிண்டரில் இருவருக்குசிகிச்சை, வராண்டாவில் படுக்க வைத்து ஆக்சிஜன் கொடுப்பது என,எவ்வளவோ முயற்சி செய்தும், சுகாதாரத் துறையால்சமாளிக்க முடியவில்லை. இதனால், கொரோனா பாதித்தோர் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.இதுதவிர நெய்வேலி மருத்துவமனையில் 92 ஆக்சிஜன் படுக்கைவசதிகள் இருந்தும், அப்பகுதியில் பாதித்தவர்களைக் கூட அவர்களால்சமாளிக்க முடியாமல், மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர்.

இதனால், மருத்துவமனைக்கு சாதாரண நோய்க்கு வருபவர்கள் கூடதொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க நடவடிக்கைஎடுக்க வேண்டும்.பரவலுக்கு காரணம்தொற்று பாதித்தவர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படுவதால் தொற்று மேலும் பரவி வருகிறது.

கடலுார் மாவட்டத்தில், பெரு நகரங்களுக்கு இணையாக பாதிப்புஎண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு அதிகரித்துள்ளதால், கொரோனாதனிமைப்படுத்தும் முகாம்கள் அதிகரிக்கவும், கூடுதல் ஆக்சிஜன்வசதிகளுடன் கூடிய சிறப்பு சிகிச்சை மையங்களையும் போர்க்காலஅடிப்படையில் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே, மாவட்டநிர்வாகம், பொதுமக்களுக்கானவிழிப்புணர்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினால்  மட்டுமே கொரோனா பாதிப்பில்இருந்து பாதுகாக்க முடியும்.படுக்கை இருந்தும் ஆக்சிஜன் இல்லைமாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்கு முக்கிய மையமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையாமருத்துவக் கல்லுாரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *