லண்டன்,
இங்கிலாந்தில் கொரோனா வைரசின் 2-வது அலை உலுக்கி எடுத்தது. இதையடுத்து, அந்நாட்டில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டன. தடுப்பூசி போடும் பணியும் துரிதப்படுத்தப்பட்டு அதிவேகத்தில் போடப்படுகிறது.
இதனால், அங்கு நோய்த்தொற்று குறைய ஆரம்பித்தது. இதையடுத்து, இங்கிலாந்தில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் வரும் ஜூன் 21 ஆம் தேதிக்கு பிறகு தளர்த்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்து இருந்தார்.
இதனால், தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஏற்கனவே அறிவித்தபடி, அந்நாட்டில் கட்டுப்பாடுகளை தளர்த்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 3,542- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.புதிய வகை உருமாறிய கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.