பிரியங்கா காந்தி வலியுறுத்தல் “மருத்துவ அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்”.!!!

மருத்துவம்

‘மருத்துவ அத்தியாவசியப் பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும்’: பிரியங்கா காந்தி

தொற்று நோய் காலத்தில் மருத்துவ அத்தியாவசிய பொருள்களின் மீதான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், “ஒரு தொற்றுநோய்களின் போது ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், தடுப்பூசிகள் மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய மருத்துவ தயாரிப்புகளுக்கு ஜிஎஸ்டி சுமத்துவது கொடூரமானது மற்றும் உணர்வற்றது” எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் “இன்றைய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், கரோனாவை எதிர்த்துப் போராடப் பயன்படும் அனைத்து உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் மீதான ஜிஎஸ்டியை அரசாங்கம் ரத்து செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *