அடுத்த ஆண்டு 5 மாநில தேர்தலை நடத்துவோம்: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நம்பிக்கை.!!

சென்னை

தமிழகம்,மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் கடந்த மார்ச் முதல் ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. தேர்தலுக்கு முன் இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகமிக குறைவாக இருந்தது. அதாவது 10 ஆயிரத்திற்கும் கீழ் இருந்தது.

ஐந்து மாநில தேர்தல், உ.பி. உள்ளாட்சி தேர்தல், கும்பமேளா ஆகிவற்றின் காரணமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றின் தாக்கம் வேகமெடுத்தது. 2-வது அலை உருவாகி தினசரி 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். தினசரி உயிரிழப்பு 4 ஆயிரத்திற்கும் மேல் பதிவானது. சென்னை உயர்நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையம் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்தது. இதனால் பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருந்த இடைத்தேர்தல்களை காலவரையின்றி ஒத்திவைத்துள்ளது.

அடுத்த ஆண்டு உத்தர பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அரசின் ஆட்சிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதனால் இந்த ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஏற்கனவே, பீகார் மற்றும் ஐந்து மாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு இடையில் தேர்தலை நடத்தி முடித்த தேர்தல் ஆணையம், இந்த தேர்தலையும் குறிப்பிட்ட நேரத்தில் நடத்தி முடித்துவிட இருக்கிறது.

எப்படியும் முடித்துவிடுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுசில் சந்திரா என்று தெரிவித்துள்ளார்.

‘‘ஆட்சி முடியும் காலத்திற்குள் நாங்கள் தேர்தல் நடத்தி, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் பட்டியலை அந்தந்த மாநில கவர்னர்களிடம் பட்டியலை தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே பீகார் மற்றும் ஐந்து மாநிலங்களில் கொரோனா தொற்றிற்கிடையே தேர்தலை நடத்தியுள்ளோம். அதற்கான அனுபவம் உள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *