சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி சார்பில் “ஊரடங்கு உணவுக்கரம்” என்ற பெயரில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.!!
தமிழகத்தில் கெரோனோ தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கபட்டது. இதன் காரணமாக கடைகள் அடைக்கபட்டதால் சென்னையில் வாழ்வாதாரம் இழந்த ஏழை மக்களுக்கு சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரி பேரசிரியர்கள்-மாணவர்கள்-முன்னாள் மாணவர் சங்கத்தினர் இணைந்து மதிய உணவு திட்டத்தை” ஊரடங்கு உணவுக்கரம்” என்ற பெயரில் இக்கல்லூரி முதல்வர் பஷீர் அகமது தொடங்கிவைத்தார்.அவரின் அறிவுறுத்தலின்படி புதுக்கல்லூரி வாயிலில் கொரோனோ பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியுடன் 18வது நாளாக இன்று எழை மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதுவரை 10500 பேருக்கு உணவு வழங்கப்பட்டது.இந்த உணவு வழங்கும் நிகழ்வை இக்கல்லுரி பேராசியர்கள் அன்சர், சுலைமான், ரஸ்வி, ஹைதர் அலி மற்றும் கண்காணிப்பாளர் ரசூல் மைதீன் மற்றும் மாணவர் அமைப்பினர் கலந்துகொண்டனர்.