அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் அரசின் உதவித் தொகை வழங்க வேண்டும்.ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
கொரோனா பெரும் தொற்று காலத்தில் பத்திரிக்கையாளர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்து செய்திதாள்கள் காட்சி – ஒலி ஊடகங்களில் பணியாற்றி வருகின்றனர் .
அவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு ரூ .10 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என்றும் ஊக்கத் தொகையாக ரூ .5 ஆயிரம் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்து இருப்பது மிகுந்த வரவேற்கதக்கது .
ஆனால் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் பணியாற்றும் அங்கிகரிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் , புகைப்பட கலைஞர்கள் , ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர்களுக்கு அரசு அங்கீகார அட்டை அல்லது மாவட்ட ஆட்சியாளர் மூலம் வழங்கப்பட்ட அடையாள அட்டை வைத்து இருப்போர்களுக்கு மட்டுமே இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது .
தமிழக அரசு , பத்திரிக்கையாளர்களில் எந்த வித பாரபட்சமும் பார்க்காமல் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் அரசு அளிக்கும் அனைத்து உதவித் தொகைகளும் வழங்கப்பட வேண்டும் .
அதோடு பத்திரிக்கையாளர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு , உரிய அங்கிகாரத்தையும் , நம்பிக்கையையும் அரசு வழங்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன் என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.