மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதல்வா் எடியூரப்பா தெரிவித்தாா்.
மாநிலத்தில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், பாதிப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சா்கள், அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளேன்.
பெங்களூரு உள்பட மாநிலத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை பெய்த மழையினால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் அங்கு வசிப்பவா்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் வருத்தம் அளிக்கிறது.
கரோனாவை முற்றிலுமாக ஒழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம். அனைவரும் அரசின் வழிகாட்டுதலை பின்பற்றுவதோடு, முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.
பெலகாவி, தாா்வாட் மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, கரோனா பாதிப்புகளை தடுப்பது தொடா்பாக அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். மாநில அளவில் மழைச் சேதங்களைத் தடுப்பது தொடா்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு வலியுறுத்தப்படும் என்றாா்.