கரோனா மூன்றாவது அலை: தில்லி முதல்வர் கேஜரிவால் ஆலோசனை.
தில்லியில் கரோனா மூன்றாவது அலை உருவாகும் அபாயம் இருக்கும் சூழ்நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று இரண்டு முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால்.
கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வசதியாக, உயர்நிலைக் குழுவையும், நிபுணர்கள் குழுவையும் தில்லி அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உயர்நிலைக் குழுக் கூட்டம் 11 மணியளவில் நடைபெறவிருக்கும் நிலையில், பிற்பகல 3 மணியளவில் கரோனா முன்னேற்பாடுகளை மேற்கொள்ளும் குழுவின் கூட்டம் நடைபெற உள்ளதாக முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.