அனைத்து மாவட்டங்களிலும் தள்ளுவண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
தள்ளுவண்டிகளில் பழங்கள், காய்கள் விற்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்டார்.
உரிய உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று அவற்றை விற்கலாம். தொலைபேசியிலோ அல்லது ஆன்-லைன் வழியாகவோ ஆர்டர்களை பெற்று பலசரக்கு பொருட்களை வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யலாம். இந்த நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
மின் வணிக சேவைகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரை நடைபெறும். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களுடன் செயல்படும்.