சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியைச் சேர்ந்த 95 திருநங்கைகளுக்கு ஊரடங்கு கால நிவாரணமாக தலா ரூ.2,000 மற்றும் ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தனது சொந்த நிதியிலிருந்து இன்று வழங்கினார். மேலும், அவர்களுக்கு சமூக நலத்துறை சார்பிலான அடையாள அட்டைகளையும் வழங்கினார்அவற்றைப் பெற்றுக்கொண்ட திருநங்கைகள் ஆறுக்கு நெஞ்சார வாழ்த்து தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
