தமிழ்நாட்டில் கொரோனோ பாதிப்பால் 93 குழந்தைகள் பெற்றோரையும், 3,593 பேர் பெற்றோரில் இருவரில் ஒருவரையும் இழந்துள்ளனர் என தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் ஆணைய உறுப்பினர்கள் வி.ராமராஜ், ஐ.முரளிகுமார் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
பெற்றோரில் இருவரில் ஒருவரை இழந்தவர்கள் 3,593 பேர் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகள் 93 பேர் : தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவரை சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி கலந்துகொண்ட இந்த ஆய்வு கூட்டத்தில் ஆணைய உறுப்பினர்கள் வி.ராமராஜ், ஐ.முரளிகுமார் இதில் ஏராளமான பொதுமக்கள்குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்
குழந்தைகளுடன் தொடர்பு டைய அரசின் 20 துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் பங்கேற்ற இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் த.பழனிகுமார், மாநகர காவல் துணை ஆணையர் ஆர்.சக்திவேல் (சட்டம்- ஒழுங்கு), மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பி ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டத்திற்கு பின் ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியது:
கொரோனோ 3-வது அலை வந்தால் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடனும் மாவட்டம் வாரியாக ஆய்வுக் கூட்டம் நடத்தி வருகிறோம்.
தமிழகத்தில் கொரோனோ பாதிப்பால் தாய்- தந்தை ஆகிய இருவரையும் இழந்த குழந்தைகள் 93 பேர் மற்றும் இருவரில் ஒருவரை மட்டும் இழந்த குழந்தைகள் 3,593 பேர் என இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து, சமூக நலத் துறையினர் இந்த ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.