தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் வெளியிட்டார்.!!

சென்னை

தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின்
புதிய நிர்வாகிகள் பட்டியல்
மாவட்ட தலைவர் வெளியிட்டார்.

தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ‌.முத்தழதன் வெளியிட்டார்.

சென்னை அசோக் நகரில்,கோகுலம் பார்க்கில்,தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக புதிய நிர்வாகிகள் பட்டியலை,மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் வெளியீட்டார். இந்நிகழ்வில், மாநில பொது செயலாளர் இலா பாஸ்கரன், தென் சென்னை மத்திய மாவட்ட மகிளா காங்கிரஸ் கமிட்டியின் தலைவி எஸ்.உமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் மாவட்ட தலைவர் எம்.ஏ.முத்தழகன் கூறியதாவது :-

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒப்புதலின்படி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர், பொருளாளர், பொதுச்செயலாளர்,சர்கிள் தலைவர்கள்,
வட்ட தலைவர்கள், பெரும்பாலும் இளைஞர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.மூத்த காங்கிரஸ் நண்பர்களுக்கு ஆலோசனைக் குழுவில் இடம் பெறுகின்றனர்.
மத்திய அரசு செய்கிற தவறுகளை சுட்டிக்காட்டுக்கின்ற வகையில் காங்கிரஸ் தோழர்கள் செயல்படவேண்டும்.
இயற்கை பேரிடர், பேரிடர் காலங்களில் முன்கூட்டியே செய்யகூடிய வழிமுறைகளை செய்யாமல் தவறியது மோடி அரசு தான் என்பதை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
பாஜக மதத்தை மக்கள் மத்தியில் திணிப்பதில் தயாராகி விட்டார்கள்.
பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு விலையை கட்டுப்படுத்த வலியுறுத்தி நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம்.
பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தெரிவித்த வாக்குறுதிகள் எதையும் செய்யவில்லை.
மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது தான் தமிழகத்திற்கு அதிகளவில் தொழிற்சாலைகள், இளைஞர் வேலைவாய்ப்புகள் கிடைத்தது.
பாஜக ஆட்சி நடக்கும் வரையில் நாம் போராடவேண்டியது தான் இருக்கும்.
மத்தியில் ஆளும் அராஜக ஆட்சியை அகற்றவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில்,
தென் சென்னை மத்திய மாவட்ட பொருளாளராக ஜோதி பொன்னம்பலம்,துணை தலைவர்களாக சுசிலா கோபாலகிருஷ்ணன், விருகை சுந்தர்,வில்லியம்ஸ், ஜார்ஜ், உள்ளிட்ட 23 பேர் துணை தலைவர்களாகவும் ,மாவட்ட பொது செயலாளராக அருள்தாஸ்,செல்வகுமார்,
ராஜராஜேஸ்வரி, லதா செல்வகுமார் உள்ளிட்ட 23 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தலைமை நிலைய செயலாளராக திருவான்மியூர் மனோகரன்,மன்சூர் அலி,எம் கே பாபு,
மேலும், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், பொது செயலாளர்கள், துணை செயலாளர்கள், சர்க்கிள் தலைவர்கள், வட்ட தலைவர்கள் உள்ளிட்ட பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *