மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசி அமைப்பு சார்பில் ஊனமுற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கபட்டன.!!
பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசி அமைப்பின் சார்பில் அதன் நிர்வாகி மோகன்ராஜ் வில்லவன் பேசியதாவது
இளைஞர்களிடையே மலேசிய குடும்பத்தின் உணர்வை மேலோங்கச் செய்ய வேண்டும் பேசினார்
கோலாலம்பூர் நவ 25
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் கொள்கையான மலேசிய குடும்பம் இளைஞர்களிடையே மேலோங்கச் செய்ய வேண்டிய கடமை எங்களுக்கும் உள்ளது என்று மாற்று திறனாளிகளோடு ஏற்றமிகு தீபத்திருநாள் நிகழ்வின் வரவேற்புரையில் பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசியின் துணைத் தலைவர் மோகன்ராஜ் வில்லவன் குறிப்பிட்டார்.
மூவின மக்கள் வாழும் இந்நாட்டில் இளைஞர்களிடம் மட்டுமல்லாது அனைத்து மக்களிடமும் ஒற்றுமையை வலுப்படுத்த அனைவருடைய பங்களிப்பும் மிகவும் அவசியம்.
அனைத்து சமூகத்தின் முன்னிலையில் மலேசிய குடும்பத்தின் நல்லிணக்கத்தை வழியுறுத்த நாங்கள் எங்களின் ஒவ்வொரு நிகழ்விலும் அதனை எங்களின் இளைஞர்களுக்கு வழிகாட்டி வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசியின் ஏற்பாட்டில்
மாற்று திறனாளிகளோடு ஏற்றமிகு தீபத்திருநாள் எனும் நிகழ்வின் வழி பார்வையற்ற 30 குடும்பங்களுக்கு அடிப்படை உணவுப் பொருட்கள் ருமா பிரிஹாத்தின் வாயிலாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு
பார்வையற்றோர் சமூகத்திற்கு உணவு பொருட்கள் வழங்கும் இந்நிகழ்வை கூட்டரசு பிரதேசத்தின் சமூகநலத்துறையின் இயக்குநர் செ சம்சுஷுக்கி செ நோர் குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்வுக்கு மட்டுமில்லாது பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசியின் அதிகமான நிகழ்வுகளுக்கு பெரும் ஆதரவை வழங்கும் ஜேவி கிரேட்டிவ் சொலுஷன் நிர்வாகி ஜனதிபன் பாலன், யாக்கின் எடாரான் நிர்வாகி மார்க் யோகராஜ் குணசேகர், சுரேஸ் நாகராஜு ஆகியோர்களுக்கு இந்நிகழ்வில் சிறப்பு செய்யப்பட்டது.
பெர்கெராக்கான் பெலிய இன்ஸ்பிராசியின் தலைவர் அடிப் ஹாக்கிமி , மலேசிய பார்வையற்றோர் சங்கத்தின் தலைமை நிர்வாகி ஜியோர்ச் தோமஸ், மலேசிய விளையாட்டுத்துறை அமைச்சின் மேம்பாட்டு துறை அதிகாரி காமருல் அரிப்பின் மற்றும் இயக்கத்தின் செயலவை உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.