மலேசியாவில் முதன்முதலாக நாட்டியாஞ்சலி 2021 விழா தொடர் பரதநாட்டியம் ஆடிய மலேசிய தமிழ் இளைஞர் கலைவாணனுக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கப்பட்டது.!!
சென்னை மே 29
மலேசியாவில் முதன்முதலாக நாட்டியாஞ்சலி 2021 விழா தக்சரா பைன் ஆட்ஸ், விகாரா ஆட்ஸ் சார்பில் ஜும் காணோளி காட்சி மூலம் நடைபெற்று, இதில் மலேசியா, இந்தியா, சைனா, ஜப்பான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்பட நாடுகளில் இருந்து பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்டு தொடர்ந்து 45 நிமிடங்கள் பரதநாட்டியம் ஆடிய மலேசியாவை சேர்ந்த தமிழ் இளைஞர் கலைவாணனுக்கு கின்னஸ் சாதனை விருது வழங்கபட்டது. இந்த விருதை இந்த இரு அமைப்பின் நிர்வாகிகள் வழங்கினர். இந்த கின்னஸ் விருது பெற்ற நாட்டிய கலைஞர் கலைவாணன் தயார் பரிமளா கிருஷ்ணசாமி மலேசி சமூக சேவகராக செயலாற்றி வருகிறார்.