- சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக விஜயா கம்லேஷ் தஹில ரமானி இன்று பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 6 ம் தேதி பதவி உயர்வு பெற்றுச் சென்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, புதிய தலைமை நீதிபதியாக விஜயா கம்லேஷ் தஹில ரமானியை நியமித்து, குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வந்தார்.
சென்னை கவர்னர் மாளிகையில், இன்று காலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், புதிய தலைமை நீதிபதி வி.கே. தஹில ரமானிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது. தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், புதிய தலைமை நீதிபதிக்கு பதவியேற்பு உறுதிமொழி செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி இந்திரா பானர்ஜி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், தமிழக
அரசின் தலைமை செயலாளர், போலீஸ் டிஜிபி, சென்னை பெருநகர காவல் ஆணையர், உயர் அதிகாரிகள், மூத்த வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்
சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.