வங்கிப் பரிவர்த்தனைகள் ஏற்கனவே அறிவித்ததுபோல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும்.!!!

தமிழகத்தில் ஊரடங்கை சில தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13-ந் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. அதன்படி வங்கி கிளைகள், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கிப் பரிவர்த்தனைகள், ஏற்கனவே அறிவித்ததுபோல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம்போல, மாலை 5 மணி […]

Continue Reading

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வண்டலூர் மிருக காட்சி சாலையில் கொரோனோ பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை நேரில் சென்று ஆய்வு செய்தார்.!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்று, கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய சிங்கங்களை பார்வையிட்டு, அச்சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் வனத்துறை உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஊரக தொழிற் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு, இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திருமதி எம். […]

Continue Reading

அனைத்து விதமான பொருட்களும் தள்ளுவண்டியில் விற்க அனுமதி.!!!

அனைத்து மாவட்டங்களிலும் தள்ளுவண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்படும். தள்ளுவண்டிகளில் பழங்கள், காய்கள் விற்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்டார். உரிய உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று அவற்றை விற்கலாம். தொலைபேசியிலோ அல்லது ஆன்-லைன் வழியாகவோ ஆர்டர்களை பெற்று பலசரக்கு பொருட்களை வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யலாம். இந்த நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை […]

Continue Reading

தமிழகத்தில் 11 மாவட்டங்களில் தளர்வுகள் உடன் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து தமிழக அரசு.!!!

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் நோய்த்தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் என்னென்ன தளர்வுகள் என்பது குறித்து தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவலாக பல மாவட்டங்களில் கட்டுக்குள் வந்துள்ளபோதிலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் மட்டும் நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து அதிகமாகவே இருந்து […]

Continue Reading

மீன் அங்காடிக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் அடுத்த வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.!!!

மீன் அங்காடிக்கு வரும் வியாபாரிகள் அனைவரும் அடுத்த வாரத்துக்குள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.கொரோனா ஊரடங்கு தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அரசின் மொத்த வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீன்பிடி வளாகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் 12 ஆயிரத்து 52 பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் மீன் விற்பனை வளாகங்கள் […]

Continue Reading

வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நன்கொடை.!!!

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் கல்வி நிறுவனங்கள் சார்பில் 1 கோடியே 1 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. வேல்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர், வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், தனது மனைவி ஆர்த்தி கணேஷ் மற்றும் மகள் பிரீத்தா கணேஷ் ஆகியோருடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் நேரில் சந்தித்து, ரூ. 1 கோடியே 1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.

Continue Reading

பெங்களூருவில் கடந்த 2 மாதங்களில் 8,700 பேர் கொரோனாவுக்கு பலி.!!!

பெங்களூருவில் கடந்த 2 மாதங்களில் கொரோனாவுக்கு 7¼ லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8,700 பேர் இறந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கர்நாடகத்தில் 2-வது அலை வேகமாக பரவி வந்தது. தற்போது அரசின் பல்வேறு நடவடிக்கையால் பாதிப்பு குறைந்து வருகிறது. மாநிலத்தில் தலைநகர் வில் தான் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகளவு உள்ளது. இந்த நிலையில், கடந்த 2 மாதத்தில் வில் வுக்கு 8 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பெங்களூருவில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் […]

Continue Reading

கர்நாடக அரசு அறிவித்துள்ள ரூ.1,250 கோடி உதவி தொகுப்பு திட்டம் அறிவியலுக்கு மாறானது-முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி.!!!

கர்நாடக அரசு அறிவித்துள்ள ரூ.1,250 கோடி உதவி தொகுப்பு திட்டம் அறிவியலுக்கு மாறானது. ஏழை மக்களின் நலனில் அக்கறை இருந்தால் 1 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். கர்நாடகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. பெங்களூருவிலும் பரவல் குறைந்துள்ளது.அவற்றுடன் ஒப்பிடும்போது, நடப்பு ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் அரசின் வரி வருவாய் அதிகரித்துள்ளது. கலால்துறை மூலம் மட்டும் 150 சதவீதம் வரி வருவாய் அதிகரித்துள்ளது. கர்நாடக அரசு அறிவித்துள்ள ரூ.1,250 கோடி உதவி […]

Continue Reading

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு உலர் பொருட்களாக வழங்கப்பட்டன.!!!

கொரோனா நோய்த்தொற்று காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதத்தில் சமைத்த சத்துணவுக்கு பதிலாக உலர் பொருட்களாக வழங்கப்பட்டன. இதற்கான உத்தரவை சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை முதன்மை செயலாளர் ‌ஷம்பு கல்போலிகர் பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில் கூறி இருப்பதாவது. கொரோனா நோய்த்தொற்று காரணமாக 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த ஆண்டு மே மாதத்தில் சமைத்த சத்துணவுக்கு பதிலாக உலர் பொருட்களாக வழங்கப்பட்டன. […]

Continue Reading

தில்லியில் கரோனா மூன்றாவது அலை-முதல்வர் கேஜரிவால்.!!!

கரோனா மூன்றாவது அலை: தில்லி முதல்வர் கேஜரிவால் ஆலோசனை. தில்லியில் கரோனா மூன்றாவது அலை உருவாகும் அபாயம் இருக்கும் சூழ்நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று இரண்டு முக்கிய ஆலோசனைக் கூட்டங்களை நடத்துகிறார் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால். கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வசதியாக, உயர்நிலைக் குழுவையும், நிபுணர்கள் குழுவையும் தில்லி அரசு அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. உயர்நிலைக் குழுக் கூட்டம் 11 மணியளவில் நடைபெறவிருக்கும் நிலையில், […]

Continue Reading