புலவர் இறைக்குருவனாரின் தொகுப்புகளான தமிழோசை, தமிழாரம் நூல்களை பழ.நெடுமாறன் சென்னையில் வெளியிட்டார்.!

புலவர் இறைக்குருவனாரின் தொகுப்புகளான தமிழோசை, தமிழாரம் நூல்களை பழ.நெடுமாறன் சென்னையில் வெளியிட்டார். ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்ற இவ் விழாவில் டி.கே.எஸ்.இளங்கோவன், மல்லை. சத்யா, தொல். திருமாவளவன், சீமான், இயக்குனர் கவுதமன், தேன்மொழி, கொளத்தூர் மணி, கோவை.இராமகிருட்டிணன், பொழிலன், பெ.மணியரசன், தியாகு, திருமுருகன் காந்தி, இசைமொழி, அங்கயற்கண்ணி உள்ளிட்ட பல்வேறு கட்சி-இயக்க நிர்வாகிகள், தமிழறிஞர்கள் பங்கேற்றனர். முனைவர்.மா.பூங்குன்றன் தொடக்க உரையாற்ற, இறை.பொற்கொடி, முனைவர் குணத்தொகையன், தொகுப்புரை வழங்கினர். மயிலை.வேலுமணி, வழக்குரைஞர் திருமலைதமிழரசன் நன்றியுரை வழங்கினர்.

Continue Reading

மலேசிய பிரபல தமிழ் வானொலியின் முன்னாள் அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன்.கோகிலத்தின் அகிலம் நீ புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.!!

மலேசிய பிரபல தமிழ் வானொலியின் முன்னாள் அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன்.கோகிலத்தின் அகிலம் நீ புத்தக வெளியீட்டு விழா நடைபெறுகிறது.!! மலேசிய பிரபல தமிழ் வானொலி அறிவிப்பாளரும் எழுத்தாளருமான பொன். கோகிலத்தின் முதல் பதிப்பான அகிலம் நீ .. புத்தக வெளியீட்டு விழா மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள தோட்ட மாளிகையில் பிப்ரவரி மாதம் 2ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. நூல் வெளியீட்டு விழாவில் உலகமெங்கும் உள்ள தமிழ் பெண் ஆளுமைகள் இப்புத்தகத்தை வாழ்த்தி பேச […]

Continue Reading

கமல்ஹாசன் சகோதரர் சாருஹாசன் 90வது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது வீட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.!!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும்  நடிகருமான கமல் ஹாசன் அவர்களின் மூத்த சகோதரர்  பெரியவர் சாருஹாசன் அவர்களின் 90 ம் ஆண்டு பிறந்த தின விழா ஹாசன் குடும்பத்தினரின் குடும்ப விழாவாக மிகச்சிறப்பான முறையில் இன்று ஆல்வார்ப்பேட்டையில் உள்ள தகமல் ஹாசன் அவர்களின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  கமல் ஹாசன் அவர்களின் குடும்பத்தாரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  மனைவி  லதா ரஜினிகாந்த் இசைஞானி இளையராஜா சுகாசினி மணிரத்தினம்  உள்பட உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Continue Reading

டி ராஜேந்தர் திடீர் பத்திரிக்கையாளர் சந்திப்பு.!!

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தர் பதவியேற்றார். இதுதொடர்பாக இன்று பத்திரிக்கையாளர்களை டி.ராஜேந்தர், டி.மன்னன் சந்தித்தனர். சந்திப்பில் டி.ராஜேந்தர் பேசியபோது, “சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி. மேலும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஶ்ரீனிவாசலு, செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.மன்னன், இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.காளையப்பன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்.பாபுராவ் ஆகியோருக்கும், வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களை […]

Continue Reading

சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் கவிஞர் கண்ணதாசன் மெழுகு சிலையை பிரபல பின்னணி பாடகி பி சுசிலா திறந்து வைத்தார்.!!

சென்னையில் திருவையாறு 2019 – பருவம் 15* 18 டிசம்பர் 2019 முதல் 25 டிசம்பர் 2019 வரை காமராஜர் அரங்கம், சென்னை சென்னை காமராஜர் அரங்கில் சென்னையில் திருவையாறு சங்கீத நாட்டிய வைபவத்தின் துவக்க விழா, இசைக்கலைஞர்கள், பாடகர்கள் இணைந்து பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாட 18 டிசம்பர் 2019 (புதன்கிழமை) அன்று கோலாகலமாக துவங்கியது. இந்த விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், பிண்ணனி பாடகி பத்மபூஷண் டாக்டர் பி.சுசீலா, இந்திய […]

Continue Reading

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் கமல்ஹாசன் பேட்டி .!!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமான மாணவ- மாணவிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். மாணவர்கள் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், சட்டங்கள் மக்களுக்கு பயன்படவில்லை என்றாள் அவை மாற்றப்பட வேண்டும்.  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என பேட்டி அளித்தார்

Continue Reading

சிங்கப்பூர் பிரபல தொழிலதிபர் எம்.ஏ.முஸ்தாபா – ஹதிஜா தம்பதிகள் முன்னின்று நடத்திய திருமண விருந்து.!!

சிங்கப்பூர் பிரபல தொழிலதிபர் எம்.ஏ.முஸ்தாபா – ஹதிஜா தம்பதிகள் முன்னின்று நடத்திய திருமண விருந்து.!! திரைப்பட இசைமைப்பாளர் தாஜ்நூர்-ரஹீலா தம்பதியினர் மகள் சுமையா – யாமீன் திருமண விருந்து நிகழ்ச்சியை, சிங்கப்பூர் பிரபல தொழில் அதிபர் எம்.ஏ.முஸ்தாபா – ஹதிஜா தம்பதிகள் முன்னின்று நடத்தி வைத்து வாழ்த்தினர். அருகில் மணமகன் தந்தை லியாகத்அலி வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் B.H.அப்துல்ஹமீது, ஆதம்பாக்கம் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

மலேசியாவில் வளர்ந்துவரும் பி.ஆர்.மியூசிக் ஸ்டுடியோவினரின் பல நேரம் இசை ஆல்பம் யுடியூப் சேனலில் வெளியானது.!!

மலேசியாவில் வளர்ந்துவரும் பி.ஆர். மியூசிக் ஸ்டுடியோவினரின் பல நேரம் இசை ஆல்பம் இன்று கோலாம்பூரில் யூடியூப் சேனலில் வெளியானது. புது முக இளைஞர்கள் நடித்த இந்த பல நேரம் இசை ஆல்பத்தின் இளம் இயக்குனர் தி.எஸ்.மதன் இயக்கி உள்ளார், இசை அமைப்பாளர் என்.பாரதிராஜா இந்த தமிழ் பாடல் ஆல்பத்தில் நீத்தா கிருஷ்ணன், திவ்யா பாரதி பன்னீர்செல்வம்,மெய் நீலன் தமிழ் செல்வன், வி.தினேஷ் (தி ஆமோ) ரம்யா ஜனனி, சதீஷ் நாயூடு, திவ்யா கோவன், ஆர். மாகாதேவன் மற்றும் […]

Continue Reading

மறைந்த சன் டிவி கேமராமேன் செந்தில் வீட்டிற்கு சென்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி.!!

உடல்நலக் குறைவால் அண்மையில் உயிரிழந்த சன் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் செந்தில் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், செந்திலின் மனைவி வசந்தி மற்றும் குடும்பத்தினரிடம் துக்கம் விசாரித்து, ஆறுதல் தெரிவித்தார். செந்தில் இறந்த சமயத்தில் பொதுக்குழு நடைபெற்றுக் கொண்டிருந்ததால், அப்போது செல்ல முடியாத ஸ்டாலின் அவர்கள், இன்று சென்று தனது பங்களிப்பை பதிவு செய்து, நெகிழ்ச்சியில் ஆழ்த்தினார்

Continue Reading

டாக்டர் அம்பேத்கர் 64வது நினைவு நாளை முன்னிட்டு துறைமுக வளாகத்தில் உள்ள சிலைக்கு தந்தை பெரியார் திராவிடர் கட்சியினர் வீரவணக்கம் மலரஞ்சலி செலுத்தினர்.!!

டாக்டர் அம்பேத்கர் 64வது நினைவு நாளை முன்னிட்டு துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகிலுள்ள படத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கட்சி சார்பில் சென்னை மாவட்ட செயலாளர் ச.குமரன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர் இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கி.குமரப்பா,நிர்வாகிகள் திலிபன், செந்தில், விஜய் ஜனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading