உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இன்று பதவி ஏற்றார் !!

 சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக விஜயா கம்லேஷ் தஹில ரமானி இன்று பதவியேற்றார். கவர்னர் மாளிகையில் நடைபெற்ற வண்ணமிகு நிகழ்ச்சியில் அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நீதிபதிகள், அதிகாரிகள் கலந்துகொண்டனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி, உச்ச நீதிமன்ற நீதிபதியாக கடந்த 6 ம் தேதி பதவி உயர்வு பெற்றுச் சென்றார். இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, […]

Continue Reading

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி திறப்பு!!

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை காரணமாக வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நீர் திறப்பு.!! வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக நீர் திறக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து 55 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.  மேலும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வெள்ளம் அதிகமானல் 100 கன அடி தண்ணீர் திறந்து விடுபதற்கு வாய்ப்பு இருப்பதாக  அதிகாரிகள் கூறினர்.

Continue Reading

அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியில் கலைஞரின் உடல் மருத்துவமனையிலிருந்து கோபாலபுரம் சென்றது!!

அலங்கரிக்கப்பட்ட சவ பெட்டியில் கலைஞர் கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது

Continue Reading

சிலை கடத்தல் விவகாரம் சிபிஐ க்கு மாற்றம் ஏன் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!!

சென்னை, ஆக.3:சிலை கடத்தல் வழக்குகள் சர்வதேச விவகாரம் என்பதால்தான் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐ-க்கு மாற்றுவது குறித்த முடிவை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞரிடம் தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, தமிழக அரசின் முடிவு குறித்து நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை புதன்கிழமை விசாரித்த நீதிமன்றம், அரசின் முடிவு மற்றும் உத்தரவுகள் தொடர்பான விவரங்களை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்ய வேண்டுமென […]

Continue Reading

நடிகர் விவேக்கின் கண்காணிப்பு கேமரா விழிப்புணர்வு வீடியோ வெளியீடு!!

சிசிடிவி கேமரா பொருத்துவதன் அவசியம் குறித்து நடிகர் விவேக் தயாரித்து நடித்திருந்த ‘‘மூன்றாவது கண்’’ என்ற காவல் விழிப்புணர்வு குறும்படத்தின் குறுந்தகடை இன்று (04.8.2018) காவல் ஆணையரகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன்,.கா.ப., அவர்கள் வெளியிட மற்றும் நடிகர் விவேக் பெற்று கொண்டார்.

Continue Reading

விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.!!

இன்று  மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள் புதுக்கோட்டை – கீரனூர் பைபாஸ் சாலையில்https://youtu.be/xrJAuLwrQ9M ராயல் பாலிடெக்னிக் அருகில் சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மற்றும் தனது பாதுகாப்பு வாகனம் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தானே களத்தில் இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பியதை கண்டு அப்பகுதிி மக்கள் மிகவும் நெகிழ்சி அடைந்தனர்..https://youtu.be/zCTK7fBUJBQ

Continue Reading

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சத்தை கொளத்தூர் மாநகராட்சி பள்ளி கட்டிட பணிக்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்!!

திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 20 லட்சத்தை கொளத்தூர் மாநகராட்சி பள்ளி கட்டிட பணிக்காகவும், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். ஏழைப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களையும் தொகுதி ஏழை மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்ககளையும் வழங்கினார்

Continue Reading

குடும்ப அரசியல் என சொல்லி விடுவார்கள்   தம்பி மகனை தவிர்த்த வைகோ!!

குடும்ப அரசியல் என சொல்லி விடுவார்கள் என  தம்பி மகனை தவிர்த்த வைகோ!! நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகிறார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. அதன் ஒரு பகுதியாக கேரளா சென்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். மேலும் காங்கிரசை சேர்ந்த அம்மாநில எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவையும் சந்தித்தார். இருவரிடமும் தேனி பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த கேரள அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார் கேரள எதிர்கட்சி தலைவரை […]

Continue Reading

நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க இன்று நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமாகா தலைவர் ஜி கே வாசன்.ஆர்.நல்லகண்ணு, வர்த்தகப் பிரிவு தலைவர் ஆர்.எஸ்.முத்து பங்கேற்பு

தமிழ்நாடு நரிக்குறவர் கூட்டமைப்பின் சார்பாக நரிக்குறவர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்று சேப்பாக்கத்தில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் த.மா.க தலைைவர் ஜி.கே.வாசன் ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான அய்யா திரு நல்லகண்ணு அவர்கள் , தமிழ் மாநில காங்கிரசின் வர்த்தகர் அணி தலைவரான திரு ஆர் எஸ் முத்து , த.மா.க தலைமைைை நிலைய செலாளர் நரிக்குறவர் களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மூத்தவர் அய்யா திரு ரகுபதி மற்றும் தமிழ்நாடு […]

Continue Reading