கமல்ஹாசன் சகோதரர் சாருஹாசன் 90வது பிறந்தநாள் விழா சென்னையில் அவரது வீட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.!!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும்  நடிகருமான கமல் ஹாசன் அவர்களின் மூத்த சகோதரர்  பெரியவர் சாருஹாசன் அவர்களின் 90 ம் ஆண்டு பிறந்த தின விழா ஹாசன் குடும்பத்தினரின் குடும்ப விழாவாக மிகச்சிறப்பான முறையில் இன்று ஆல்வார்ப்பேட்டையில் உள்ள தகமல் ஹாசன் அவர்களின் இல்லத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  கமல் ஹாசன் அவர்களின் குடும்பத்தாரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்  மனைவி  லதா ரஜினிகாந்த் இசைஞானி இளையராஜா சுகாசினி மணிரத்தினம்  உள்பட உறவினர்களும் நண்பர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Continue Reading

டி ராஜேந்தர் திடீர் பத்திரிக்கையாளர் சந்திப்பு.!!

சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக டி.ராஜேந்தர் பதவியேற்றார். இதுதொடர்பாக இன்று பத்திரிக்கையாளர்களை டி.ராஜேந்தர், டி.மன்னன் சந்தித்தனர். சந்திப்பில் டி.ராஜேந்தர் பேசியபோது, “சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி. மேலும் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஶ்ரீனிவாசலு, செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட டி.மன்னன், இணை செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.காளையப்பன், பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட என்.பாபுராவ் ஆகியோருக்கும், வெற்றி பெற்ற செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். எங்களை […]

Continue Reading

சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் கவிஞர் கண்ணதாசன் மெழுகு சிலையை பிரபல பின்னணி பாடகி பி சுசிலா திறந்து வைத்தார்.!!

சென்னையில் திருவையாறு 2019 – பருவம் 15* 18 டிசம்பர் 2019 முதல் 25 டிசம்பர் 2019 வரை காமராஜர் அரங்கம், சென்னை சென்னை காமராஜர் அரங்கில் சென்னையில் திருவையாறு சங்கீத நாட்டிய வைபவத்தின் துவக்க விழா, இசைக்கலைஞர்கள், பாடகர்கள் இணைந்து பஞ்சரத்ன கீர்த்தனைகள் பாட 18 டிசம்பர் 2019 (புதன்கிழமை) அன்று கோலாகலமாக துவங்கியது. இந்த விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெகத்ரட்சகன், பிண்ணனி பாடகி பத்மபூஷண் டாக்டர் பி.சுசீலா, இந்திய […]

Continue Reading

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் கமல்ஹாசன் பேட்டி .!!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 2-வது நாளாக  போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏராளமான மாணவ- மாணவிகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்து பேசினார். மாணவர்கள் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கமல்ஹாசன், சட்டங்கள் மக்களுக்கு பயன்படவில்லை என்றாள் அவை மாற்றப்பட வேண்டும்.  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் என பேட்டி அளித்தார்

Continue Reading

சிங்கப்பூர் பிரபல தொழிலதிபர் எம்.ஏ.முஸ்தாபா – ஹதிஜா தம்பதிகள் முன்னின்று நடத்திய திருமண விருந்து.!!

சிங்கப்பூர் பிரபல தொழிலதிபர் எம்.ஏ.முஸ்தாபா – ஹதிஜா தம்பதிகள் முன்னின்று நடத்திய திருமண விருந்து.!! திரைப்பட இசைமைப்பாளர் தாஜ்நூர்-ரஹீலா தம்பதியினர் மகள் சுமையா – யாமீன் திருமண விருந்து நிகழ்ச்சியை, சிங்கப்பூர் பிரபல தொழில் அதிபர் எம்.ஏ.முஸ்தாபா – ஹதிஜா தம்பதிகள் முன்னின்று நடத்தி வைத்து வாழ்த்தினர். அருகில் மணமகன் தந்தை லியாகத்அலி வானொலி,தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் B.H.அப்துல்ஹமீது, ஆதம்பாக்கம் ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

டாக்டர் அம்பேத்கர் 64வது நினைவு நாளை முன்னிட்டு துறைமுக வளாகத்தில் உள்ள சிலைக்கு தந்தை பெரியார் திராவிடர் கட்சியினர் வீரவணக்கம் மலரஞ்சலி செலுத்தினர்.!!

டாக்டர் அம்பேத்கர் 64வது நினைவு நாளை முன்னிட்டு துறைமுக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அருகிலுள்ள படத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கட்சி சார்பில் சென்னை மாவட்ட செயலாளர் ச.குமரன் தலைமையில் வீரவணக்கம் செலுத்தி மலர் தூவி மரியாதை செலுத்தினர் இந்நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கி.குமரப்பா,நிர்வாகிகள் திலிபன், செந்தில், விஜய் ஜனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Continue Reading

ஜம்மு காஷ்மீரில் நடந்த நீர் மற்றும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.!!

ஜம்மு காஷ்மீரில் நடந்த நீர் மற்றும் பேரிடர் மேலாண்மை கருத்தரங்கத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.!! ஜம்முவில் மத்திய அரசின் ‘ஒரே இந்தியா சிறப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ் அண்மையில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்கில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். ‘ஒரே இந்தியா சிறப்பான இந்தியா’ திட்டத்தின் கீழ் ‘நீர் ஆற்றல் மற்றும் பேரிடர் மேலாண்மை’ என்னும் தலைப்பில் ஜம்முவில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு, […]

Continue Reading

சென்னையில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!

சென்னையில் 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!! தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கிழக்கு நோக்கி வீசும் காற்றின் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாஹே, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் கன மழையில் இருந்து மிகவும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் […]

Continue Reading

சென்னையை அடுத்த மூவரசம் பேட்டை அரசு பள்ளியில் 25 வருடங்களுக்கு முன் படித்த மாணவ-மாணவிகள் மீண்டும் சந்தித்த நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி.!!

சென்னையை அடுத்த மூவரசம் பேட்டை அரசு பள்ளியில் 25 வருடங்களுக்கு முன் படித்த மாணவ-மாணவிகள் மீண்டும் சந்தித்த நெஞ்சை நெகிழ வைக்கும் நிகழ்ச்சி.!! சென்னையை அடுத்த மூவரசம் பேட்டை அரசு பள்ளியில் 25 வருடங்களுக்கு முன் படித்த மாணவ-மாணவிகள் மீண்டும் சந்தித்த நெஞ்சை நெகிழ வைக்கும் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 25 வருடங்கள் முன்பு 1994-1995 வருடங்களில் இந்த அரசு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் சந்தித்தனர். அப்பொழுது அவர்கள் படித்த காலத்தில் […]

Continue Reading

சுகாதாரத்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாம் இன்று நடந்தது.!!

சுகாதாரத்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாம் இன்று நடந்தது.!! சுகாதாரத்துறை சார்பாக, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில், ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் பத்திரிகையாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் இரத்த அழுத்தம்,சர்க்கரை அளவு சரி பார்க்கப்பட்டு, மருத்துவ ஆலோசனையுடன் மருந்துகளும் வழங்க பட்டது. மேலும் காய்ச்சலை தவிர்க்க நிலவேம்பு குடிநீர் வழங்க பட்டது. செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் என 200க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தொடர்ந்து […]

Continue Reading