தமிழகத்தில் பொதுமுடக்கம் நீட்டிப்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.!!!

கரோனா இரண்டாம் அலை காரணமாக மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை அமைச்சர், முதன்மைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில், பொதுமுடக்கம் நீட்டிப்பு, கூடுதல் தளர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Continue Reading

இயல், இசை, நாடக மன்றம் சார்பில் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிக்கப்பட்டிருந்தது.!!!

தமிழகத்தில் உள்ள நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ. 3,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடக்கி வைத்தார். இயல், இசை, நாடக மன்றம் சார்பில் நலிவடைந்த கலைஞர்களுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ. 3,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார்

Continue Reading

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.!!!

மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனையில் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். மேலும்,  பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில்,  மு.தீனபந்து இ.ஆ.ப, (ஓய்வு), டி.ஆர்.பி. இராஜா, மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர், மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ.அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு.சிவராமன் மற்றும் முனைவர் நர்த்தகி நடராஜ் உள்ளிட்டோர் பகுதி நேர உறுப்பினர்களாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Continue Reading

தமிழகத்தில் மின் தேவைகள் குறைந்ததற்கு காரணம்.!!!

தமிழகத்தில் பொதுமுடக்கம், பரவலாக மழை உள்ளிட்ட காரணங்களால் மின்தேவை குறைந்துள்ளது. தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவது, பொதுமுடக்கத்தால் பல்வேறு அலுவலகங்கள் இயங்காதது உள்ளிட்ட காரணங்களால் மின்தேவை குறைந்துள்ளது. இதன்படி, மின்தேவையின் அளவு 3,094 மெகாவாட் குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சராசரி மின்தேவை சுமாா் 12 ஆயிரம் மெகாவாட்டை ஒட்டி உள்ளது. அதே நேரம், பொதுமுடக்கத்தில் திங்கள்கிழமை முதல் தளா்வு அளிக்கப்படுவதால், வரும் நாள்களில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்புள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.

Continue Reading

பொது முடக்கம் காரணமாக பலாப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் பண்ருட்டி விவசாயிகள் பரிதவிப்பு.!!!

பண்ருட்டி பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள பலாப் பழங்கள். பொது முடக்கம் காரணமாக பலாப் பழங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனா். தமிழகத்தில் அதிகபட்சமாக கடலூா் மாவட்டத்தில் சுமாா் 900 ஏக்கா் பரப்பில் பலா சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனினும், பலா தோப்பு என்ற வகையில் மிகக் குறைவாகவும், வீடுகளிலும், வயல் வரப்புகளிலும் அதிகபட்சமாகவும் பலா மரங்கள் வளா்க்கப்பட்டு வருகின்றன. பண்ருட்டியில் விளையும் பலாப் பழங்களை அறுவடைக்கு முன்பே வியாபாரிகள் விலை பேசி முன்பணம் […]

Continue Reading

இன்று பதிமூன்று பேர் கொண்ட நிபுணர் குழு கருப்பு பூஞ்சை நோய்த் தொற்றைத் தடுக்க அமைக்கப்பட்டது.!!!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலே சில நேரங்களில் எதிர்வினையாற்றக் கூடிய நிலை ஏற்படும். இதனால், அவர்கள் தீவிரசிகிச்சைக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த சமயத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஸ்டீராய்டு போன்ற நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் மருந்துகள் வழங்கப்படும். தமிழகத்தில் 921 பேர் கருப்பு பூஞ்சை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் குணமடைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading

இ பதிவுடன் தன்னார்வலர்கள் உணவுத் தேவையில் உள்ள முதியோர்,மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவளித்து வருகிறார்கள்.!!!

உணவுத் தேவையில் உள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் தன்னார்வலர்கள், இ-பதிவுடன் செல்லலாம். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத முழு ஊரடங்கு கடந்த மாதம் 10-ந் தேதி முதல் 7-ந் தேதி (இன்று) காலை 6 மணி வரை அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தளர்வுகளுடன் மேலும் ஒரு வாரத்துக்கு, அதாவது 14-ந் தேதி காலை 6 மணி வரையிலும் நீட்டித்து, முதல்-அமைச்சர் நேற்று முன்தினம் உத்தரவிட்டார். இதனை […]

Continue Reading

வங்கிப் பரிவர்த்தனைகள் ஏற்கனவே அறிவித்ததுபோல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும்.!!!

தமிழகத்தில் ஊரடங்கை சில தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து வங்கி வேலை நேரத்தையும் வருகிற 13-ந் தேதி வரை குறைத்து தமிழ்நாடு வங்கியாளர்கள் குழுமம் அறிவித்துள்ளது. அதன்படி வங்கி கிளைகள், காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். வங்கிப் பரிவர்த்தனைகள், ஏற்கனவே அறிவித்ததுபோல பகல் 2 மணி வரை மட்டும் நடைபெறும். மண்டல அலுவலகங்கள், நிர்வாக அலுவலகங்கள் வழக்கம்போல, மாலை 5 மணி […]

Continue Reading

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வண்டலூர் மிருக காட்சி சாலையில் கொரோனோ பாதிக்கப்பட்ட சிங்கங்களுக்கு கொடுக்கப்படும் சிகிச்சையை நேரில் சென்று ஆய்வு செய்தார்.!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு நேரில் சென்று, கோவிட் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய சிங்கங்களை பார்வையிட்டு, அச்சிங்கங்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் மற்றும் வனத்துறை உயர் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்கள். இந்நிகழ்வின்போது, மாண்புமிகு ஊரக தொழிற் துறை அமைச்சர் திரு. தா.மோ. அன்பரசன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளர் திருமதி சுப்ரியா சாஹு, இ.ஆ.ப., நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜி. செல்வம், சட்டமன்ற உறுப்பினர் திருமதி எம். […]

Continue Reading

அனைத்து விதமான பொருட்களும் தள்ளுவண்டியில் விற்க அனுமதி.!!!

அனைத்து மாவட்டங்களிலும் தள்ளுவண்டிகள், நடமாடும் வாகனங்கள் மூலமாக காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்ந்து அனுமதிக்கப்படும். தள்ளுவண்டிகளில் பழங்கள், காய்கள் விற்பதற்கான நேரக் கட்டுப்பாட்டை தமிழக அரசு விதித்துள்ளது. இதுகுறித்த உத்தரவை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்டார். உரிய உள்ளாட்சி அமைப்புகளிடம் முன் அனுமதி பெற்று அவற்றை விற்கலாம். தொலைபேசியிலோ அல்லது ஆன்-லைன் வழியாகவோ ஆர்டர்களை பெற்று பலசரக்கு பொருட்களை வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்யலாம். இந்த நடவடிக்கைகள் காலை 7 மணி முதல் மாலை […]

Continue Reading